Jasprit Bumrah : போர்க்கதை ஆயிரம்.. இன்னும் ஒரு விக்கெட் தான்.. சாதனைக்கு அருகில் பும்ரா!
Jasprit Bumrah : ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டுவதற்கு ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அனல் பறக்கும் ஃபார்மில் உள்ளார்,இந்திய அணியின் முதுகெலும்பாக திகழும் அவர் பெர்த் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார், ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலியர்களை ஆதிக்கம் செலுத்தும் வெகு சிலர் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் பும்ரா முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை தனது பந்துவீச்சின் மூலம் நிலை குலைய வைத்துள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பும்ரா ஒரு வரலாற்று மைல்கல்லை அடைய வாய்ப்பு உள்ளது. அது என்ன என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
50 விக்கெட் மைல்கல்:
ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டுவதற்கு ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது, இது எந்த ஒரு பந்து வீச்சாளரும் அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெடில் ஒரு காலண்டர் ஆண்டில் 51 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ஜாகீர் கானின் சாதனையை முறியடிப்பார். இந்த ஆண்டு ஏற்கனவே பும்ரா 10 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் IND vs AUS பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்க்ய் எதிராக39 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி அஷ்வினை சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணில் கும்ப்ளேவின் (49 விக்கெட்டுகள்)முறியடிக்க, பும்ராவுக்கு இன்னும் 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
முறியடிக்கப்படாத கபில் தேவ் சாதனை:
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் கபில் தேவ்வின் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.புகழ்பெற்ற ஆல்ரவுண்டரான கபில் தேவ், 1983-ல் 75 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. அவர் 1979 இல் 74 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரானார். வேகப்பந்து வீச்சாளர்களில், ஜாகீர் கான் ஒரு காலண்டர் ஆண்டில் 50 விக்கெட்டுகளை கடந்த மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார், 2002 இல் இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Watch Video : இந்த வேகம் போதுமா குழந்தை! டக் அவுட் ஆன ஜெய்ஸ்வால் .பழிதீர்த்த ஸ்டார்க்
இந்திய சூழற்பந்து வீச்சாளர்களில், அனில் கும்ப்ளே கபிளே 74 விக்கெட்டுகளை எடுத்து கபிலின் சாதனையை சமன் செய்தார், அதே நேரத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் 2016 இல் 72 விக்கெட்டுகளுடன் இச்சாதனையை நெருங்கி வந்தார். மற்ற சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங், பகவத் சந்திரசேகர் மற்றும் வினு மன்கட் ஆகியோரும் 50 விக்கெட் மைல்கல்லை கடந்துள்ளனர்.