Abishek Sharma: என்ன கண்ணா இந்த ரெக்கார்ட் போதுமா? அதிரடி அபிஷேக் சர்மா புதிய சாதனை..
இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்கிற சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.
குறைந்த பந்துகளில் 1000 ரன்கள்:
நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்கிற சாதனையை முறியடித்துள்ளார்.
- அபிஷேக் சர்மா - 528 பந்துகள்
- சூர்யகுமார் யாதவ் - 573 பந்துகள்
- பில் சால்ட் - 599 பந்துகள்
- கிளென் மேக்ஸ்வெல் - 604 பந்துகள்
இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மாவின் கேட்ச்சை 5 ரன்னிலும், 11 ரன்னிலும் கேட்சகளை ஆஸ்திரேலிய அணியினர் கோட்டைவிட்டனர்...
𝘼𝙗𝙝𝙞𝙨𝙝𝙚𝙠 𝘼𝙨𝙘𝙚𝙣𝙙𝙨 🔝
— BCCI (@BCCI) November 8, 2025
1️⃣0️⃣0️⃣0️⃣ T20I runs and counting for the swashbuckling Abhishek Sharma. 👏
He also becomes the second-fastest #TeamIndia batter to achieve this feat 🔥#AUSvIND | @IamAbhiSharma4 pic.twitter.com/60OCsf5rJA
குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள்:
அபிஷேக் சர்மா குறைந்த் பந்துகளில் 1000 ரன்களை கடந்து இருந்தாலும், இன்னிங்ஸ் அளவில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இன்னிங்ஸ் அடிப்படையில் வேகமாக 1,000 டி20 ரன்களை எட்டிய இந்தியர்கள் இங்கே:
விராட் கோலி - 27
அபிஷேக் சர்மா - 28
கேஎல் ராகுல் - 29
சூர்யகுமார் யாதவ் - 31
ரோஹித் சர்மா - 40
விராட் கோலி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அனைத்து வடிவங்களிலும் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்தார். 2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு , 4,188 ரன்களுடன் ஓய்வு பெற்றார்.இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா அவருடன் ஓய்வு பெற்றார், இந்த வடிவத்தில் 4,231 ரன்களுடன் வெற்றி பெற்ற கேப்டனாக அவரது மிகப்பெரிய சாதனையை முடித்தார்.
இரண்டு ஜாம்பவான்களும் இப்போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (மற்றும் உள்ளூர் ஐபிஎல்லில்) மட்டுமே தீவிரமாக விளையாடி வருகின்றனர். மறுபுறம், அபிஷேக் சர்மா அதிரடியாக களத்தில் இறங்குகிறார்.
அபிஷேக் சர்மா டி20 புள்ளிவிவரங்கள்:
இந்திய அணியின் புதிய முகமாக மாறிவரு,,அபிஷேக் சர்மா வெறும் 27 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களைக் கடந்துள்ளார். இது வரை அவர் இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். இந்த ஆட்டங்களில் 96 பவுண்டரிகளும் 66 சிக்ஸர்களும் அடங்கும்.





















