CWG 2022 Table Tennis: காமன்வெல்த் மகளிர் குழு டேபிள் டென்னிஸ் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியா..!
காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் குழு டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் குழு டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி நேற்று முதல் இரண்டு குரூப் போட்டிகளில் வெற்றி பெற்றது. முதலில் இந்திய மகளிர் அணி நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஃபிஜி அணிகளை வீழ்த்தியிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய அணி கடைசி குரூப் போட்டியில் கயானா அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதலில் மகளிர் இரட்டையர் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா மற்றும் ரித் டென்னிசன் கயானாவின் நடாலி கம்மிங்ஸ்-செல்சி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-5,11-7,11-7 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் இந்திய அணிக்கு 1-0 என முன்னிலை அளித்தது.
🇮🇳The Indian women's Table Tennis🏓 team of Manika Batra, Reeth Tennison, Sreeja Akula and Diya Chitale stay unbeaten in the group stages with a convincing victory over Guyana in their last match.
— The Bridge (@the_bridge_in) July 30, 2022
Onto the quarters✈️#CommonwealthGames
இதைத் தொடர்ந்து மகளிர் ஒற்றையர் போட்டியில் மணிகா பாட்ரா கயானாவின் துரியா தாமஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் மணிகா பாட்ரா அதிரடியாக விளையாடினார். இவர் 11-1,11-3, 11-3 என்ற கணக்கில் எளிதாக போட்டியை வென்றார். இதன்காரணமாக இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
அடுத்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில் ரீத் டென்னிசன் செல்சியை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை ரீத் டென்னிசன் 11-7 என்ற கணக்கில் வென்றார். அதற்கு அடுத்து நடைபெற்ற இரண்டாவது கேமை ரீத் டென்னிசன் 14-12 என்ற கணக்கில் போராடி வென்றார். அடுத்து நடைபெற்ற மூன்றாவது கேமில் 13-11 என்ற கணக்கில் என்று வென்றார். அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது. குரூப் சுற்று போட்டிகளில் இந்திய மகளிர் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

