CWG 2022 Squash: காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டிகளில், வெற்றியுடன் தொடங்கிய ஜோஷ்னா, சவுரவ் கோஷால்..!
காமன்வெல்த் போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டில் ஜோஷ்னா மற்றும் சவுரவ் கோஷால் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரமித் தாண்டன் காயம் காரணமாக முதல் சுற்றுப் போட்டியில் பங்கேற்காமல் வெளியேறினார். அடுத்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் குருவில்லா மலேசிய வீரர் அமனிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மேகன் பெஸ்ட்டை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஜோஷ்னா வெளிப்படுத்தினார். அத்துடன் இந்தப் போட்டியில் 11-8,11-9,12-10 என்ற கணக்கில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார். இதன்மூலம் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Commonwealth games : Squash
— Sports India (@SportsIndia3) July 30, 2022
Joshna Chinappa beat Meagan Best in Straight set by 11-8 11-9 12-10 to advance into round of 16
Sunayna Sara KURUVILLA lost in Round of 32 against Aifa AZMAN (MAL) by 0-3 , while Ramit Tondon give bye to his opponent
🇮🇳 pic.twitter.com/VwHvdiBkHB
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷால் இலங்கையின் ஷமி வக்கீலை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷால் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதன்காரணமாக இந்தப் போட்டியை 11-4,11-4,11-6 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இரண்டாவது சுற்றுக்கு சவுரவ் கோஷால் முன்னேறி அசத்தியுள்ளார்.
Commonwealth games : Squash
— Sports India (@SportsIndia3) July 30, 2022
Saurav Ghosal beat Shamil Wakeel (SRI) by 11-4 11-4 11-6 and advance to round of 16 of men single
🇮🇳 pic.twitter.com/dPDSzf5Qb1
முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அனாகத் சிங் பங்கேற்றார். 14 வயதான அனாகத் சிங் இந்தியா சார்பில் காமன்வெல்த் போட்டியில் குறைந்த வயதில் பங்கேற்றுள்ள வீராங்கனையாக உள்ளார். இவர் தன்னுடைய முதல் சுற்றுப் போட்டியில் ஜேடா ராஸை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய 14 வயது சிறுமி அனாகத் சிங் 11-5,11-2,11-0 என்ற கணக்கில் எளிதாக வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இன்று நள்ளிரவு நடைபெறும் இரண்டாவது சுற்றுப் போட்டியில் அனாகத் சிங் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்