CWG 2022 Weightlifting: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்.. பளுதூக்குதலில் வெள்ளி வென்ற சன்கித் சர்கார்
காமன்வெல்த் போட்டிகளில் 55 கிலோ ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சன்கித் சர்கார் பங்கேற்றார்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரிவில் பளுதூக்குதலும் ஒன்று. இந்நிலையில் இன்று ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சன்கித் மகாதேவ் சர்கார் பங்கேற்றார். ஸ்நாட்ச் பிரிவில் இவர் முதல் வாய்ப்பில் 107 கிலோ எடையை தூக்கினார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 111 கிலோ எடையை தூக்கினார்.
அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 113 கிலோ எடை அசத்தலாக தூக்கினார். இதன்பின்னர் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் சன்கித் மகாதேவ் சர்கார் முதல் வாய்ப்பில் 135 கிலோ எடையை தூக்கினார். இரண்டாவது முயற்சியில் அவர் 139 கிலோ எடையை தூக்க முற்பட்டார். அப்போது அவர் எதிர்பாரத விதமாக தூக்கவில்லை.
Silver medal for India!
— India_AllSports (@India_AllSports) July 30, 2022
Sanket Sargar wins 1st medal for India at Birmingham Commonwealth Games and its a Silver in Weightlifting (Men's 55kg category).
👉 Sanket lifted total of 248kg (113 in Snatch + 135kg in C&J). Malaysian lifted 249kg overall to win Gold. #CWG22 pic.twitter.com/WgNjGaypCG
இதைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் அவர் 139 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார். எனினும் அவரால் தூக்க முடியவில்லை. இறுதியில் ஸ்நாட்ச் பிரிவில் 113 கிலோ எடையும், கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 135 கிலோ எடையையும் சன்கித் மகாதேவ் சர்கார் தூக்கினார். இதன்மூலம் இரண்டு பிரிவுகளிலும் மொத்தமாக சேர்த்து 248 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை சன்கித் சர்கார் வென்று அசத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி பகுதியைச் சேர்ந்தவர் சன்கித் மகாதேவ் சர்கார். இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா யுனிவர்சிட்டி, கேலோ இந்தியா யூத் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் தங்கம் வென்று இருந்தார். அத்துடன் 55 கிலோ எடைப்பிரிவில் இவர் தேசிய சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்