CWG 2022 India vs Ghana: கோலுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா..! கானா அணியை பந்தாடுமா இந்திய மகளிர் ஹாக்கி டீம்..?
காமன்வெல்த் போட்டியில் இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணியும், கானா ஹாக்கி அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.
காமன்வெல்த் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியும், கானா மகளிர் ஹாக்கி அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்தியாவும் கானாவும் இன்று மோதும் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இரு அணிகளும் இதற்கு முன்பு மோதிய ஒரே ஒரு போட்டியில் இந்திய அணி 13-0 என்ற கணக்கில் கானா அணியை எளிதாக வீழ்த்தி அசத்தியது. சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலககோப்பையில் இந்திய அணி 9வது இடத்தைப் பிடித்தது.
டோக்கியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக ஆடி நான்காவது இடத்தைப் பிடித்தது. இதனால், நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கலாம்,
The starting line-up for our Birmingham 2022 Commonwealth Games opener against Ghana today, July 29 2022! 👊
— Hockey India (@TheHockeyIndia) July 29, 2022
Catch the action 🏑 LIVE at 6:30 PM (IST) exclusively on Sony Ten 3, Sony Six, and Sony LIV app. 📺 pic.twitter.com/QaQLlM9RS8
இன்று நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக சவிதாபுனிதா களமிறங்கியுள்ளார். அவருடன் ரஜனி எட்டிமர்பு, டிபெண்டர் பகுதியில் தீப்கிரேஸ் எக்கா, குர்ஜித்கவுர், நிக்கி பிரதான் மற்றும் உதிதா களமிறங்குகின்றனர்.தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாக களமிறங்குகிறார்.
நடுவரிசையில் நிஷா, சுஷிலா சானு புக்ரம்பாம், மோனிகா, நேகா, ஜோதி, நவ்ஜோத் கவுர், சலிமா தேட் ஆகியோர் களமிறங்குகின்றனர். முன்களத்தில் வந்தனா கட்டாரியா, லால்ரேம்சியாமி, நவ்நீத்கவவுர் களமிறங்குகின்றனர். இந்திய மகளிர் அணி காமன்வெல்த் போட்டியில் கடைசியாக 2006ம் ஆண்டு பதக்கம் வென்றது. இதனால், 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்லுமா என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர். சற்றுமுன் தொடங்கிய ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி முதல் கோலை அடித்து அசத்தியுள்ளது.
CWG 2022: நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்..! தங்கம் வெல்வாரா ஸ்ரீஹரி..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்