CWG 2022 Boxing: காமன்வெல்த் குத்துச்சண்டை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி முகமது ஹூசாமுதுதீன் அசத்தல்..
காமன்வெல்த் போட்டிகளின் குத்துச்சண்டையில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் முகமது ஹூசாமுதுதீன் பங்கேற்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் குத்துச்சண்டை 63.5 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிவ தாபா பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிவ தாபா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் முகமது ஹூசாமுதுதீன் பங்கேற்றார். இவர் முதல் சுற்றில் தென்னாப்பிரிக்கா நாட்டின் அம்சோலே தயேயியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் சுற்றிலேயே இந்திய வீரர் முகமது ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். இதன்காரணமாக அந்த சுற்றை வென்றார்.
Commonwealth Games 2022 : Boxing
— Sports India (@SportsIndia3) July 30, 2022
Mohammed Hussamuddin defeats Amzolele Dyeyi (RSA) by 5-0 in men's featherweight (54-57kg) Round of 32
He will face Md Salim Hossain (BAN) in Round of 16 pic.twitter.com/JiWaG54UjC
அடுத்த நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுப் போட்டிகளிலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக 5-0 என்ற கணக்கில் முகமது ஹூசாமுதுதீன் தென்னாப்பிரிக்கா வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் அடுத்தச் சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் வீரர் சலீம் ஹோசனை எதிர்த்து விளையாட உள்ளார். ஏற்கெனவே நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 63.5 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சிவ தாபா முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். அவருக்கு பின்பு தற்போது இரண்டாவது சுற்றுக்கு முகமது ஹூசாமுதுதீன் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு நடைபெறும் மகளிருக்கான 70 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் பங்கேற்க உள்ளார். லோவ்லினா தன்னுடைய முதல் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை அரைன் நிகோல்சனை எதிர்த்து விளையாடுகிறார்.அவரைத் தொடர்ந்து ஆடவர் 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சீத் முதல் சுற்றுப் போட்டியில் சமோவா நாட்டைச் சேர்ந்த ஃபயோகளியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்