மேலும் அறிய

Cristiano Old Coca Cola Ad | 'இதெல்லாம் என்ன?' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்!

ரொனோல்டோ ஆரம்ப காலங்களில் நடித்த சில விளம்பரங்களை தோண்டி எடுத்து கலாய்க்கத் தொடங்கியுள்ளனர் இணையவாசிகள்.

கடந்த சில நாட்களாக பத்திரிகை செய்திகளில் பேசு பொருளாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தன்னுடைய சிறப்பான புட்பால் மூவ் மூலம் வைரலாகும் ரொனால்டோ, இந்த முறை கோகோ கோலா மூவ்  மூலம் வைரலானார்.

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையில் ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் தனது ஆட்டத்தை தொடங்கியது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணி புடாபெஸ்டில் உள்ள ஃபெரெங்க் புஸ்காஸ் மைதானத்தில் ஹங்கேரியை எதிர்கொண்டது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்புக்கு வந்து அமர்ந்தபோது, கோகோ கோலாவின் இரண்டு பாட்டில்கள் ரொனால்டோ முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதை  கண்ட ரொனால்டோ அவற்றை எடுத்து மேஜையின் ஓரத்தில் கேமராவில் தெரியாத வண்ணம் வைத்தார். மேலும் அதற்கு பதிலாக ஒரு தண்ணீர் பாட்டிலை அனைவர் முன்னிலையிலும் தூக்கி காண்பித்து ‘தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.


Cristiano Old Coca Cola Ad | 'இதெல்லாம் என்ன?' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்!

இந்த வீடியோ நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் வைரலானது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் ஒருவர் கோகோ கோலாவை தூக்கி ஓரம் வைத்தது சாதாரண நிகழ்வல்ல. அதன் எதிரொலியாக அந்நிறுவனம் ரூ.29,337 கோடி இழப்பை சந்தித்தது.

ரொனால்டோவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். உடல் ஆரோக்கியத்தில் ஒரு பெரிய விளையாட்டு வீரரின் சின்ன அறிவுரை கூட பல கோடிக்கணக்கான ரசிகர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என ஹார்ட் விடுகின்றனர் ரசிகர்கள். அதேவேளையில் ரொனோல்டோ ஆரம்ப காலங்களில் நடித்த சில விளம்பரங்களை தோண்டி எடுத்து கலாய்க்கத் தொடங்கியுள்ளனர் இன்னொரு தரப்பினர். கையில் கோக் டின்னுடன் கெத்தாக போஸ் கொடுக்கும் ரொனால்டோவின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு இதெல்லாம் என்ன கதை என கேள்வி எழுப்பியுள்ளனர் இணையவாசிகள்.



Cristiano Old Coca Cola Ad | 'இதெல்லாம் என்ன?' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்!

ஜெர்மனியில் 2006ம் ஆண்டு நடைபெற்ற புட்பால் உலகக்கோப்பையின் போது எடுக்கப்பட்ட கோக் விளம்பரமும் இப்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிலர் கேஎப்சி விளம்பரத்தை கையில் எடுத்துள்ளனர். ஆரோக்கியமான உணவை பரிந்துரைக்கிறரா ரொனால்டோ? எப்போது ஏன் கேஎப்சி சிக்கனை சாப்பிட்டு பெனால்டி ஷாட் அடிக்கிறார் என ரொனால்டோ நடித்த கேஎப்சி விளம்பரத்தை ஷேர் செய்து வருகின்றனர். அந்த விளம்பரம்  2013ல் எடுக்கப்பட்டது.

இந்த கேலி, கிண்டலுக்கெல்லாம் பதிலளித்துள்ள ரொனால்டோவின் ரசிகர்கள் தன்னுடைய தொடக்கக் காலத்தில் ரொனால்டோ நடித்த சில விளம்பரங்களை இப்போது ஒப்பிடுவது எப்படி சரியாகும்? சிறு வயதுதில் நாமெல்லாம் சரியானதை புரிந்துகொண்டுதான் இருக்கிறோமா? சில விஷயங்கள் புரிய குறிப்பிட்ட வயது வேண்டி இருக்கிறது. இப்போது ரொனால்டோ எது பக்கம் நிற்கிறார் என்பதை மட்டுமே பாருங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget