மேலும் அறிய

Chess Olympiad Closing Ceremony 2022: செஸ் ஒலிம்பியாட்: கலை நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசித்து அதிர வைத்த முதல்வர் ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட்டில் பங்கேற்றார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமையான தொடக்க விழாவுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா தொடங்கியது 

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட் உடன் வந்தார். அதன்பின்னர் நிறைவு விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இவரும் ட்ரம்ஸ் வாசித்தார்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “2000 ஆண்டுகளுக்கு முன்பாக கனியன் பூங்குன்றனார் தன்னுடைய புறநானூறு பாடலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை கூறியிருந்தார். அந்தப் பாடலின் அர்த்தம் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் நம்முடைய சகோதாரர்கள் என்பது. அந்த சகோதரத்துவ எண்ணத்துடன் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாங்கள் நடத்தினோம்.

அந்தவகையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது என்று பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் தங்களுடைய சமூக ஊடங்களில் பதிவிடும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களைவிட நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பன்னாட்டு திருவிழாவாக அமைந்தது.

ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு விளையாட்டு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது. இதன்காரணமாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கம் நிறுவப்பட உள்ளது. மேலும் சென்னையில் சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி மற்றும் ஆசிய கடற்கரை விளையாட்டுகள் நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். அத்துடன் சிலம்பாட்டத்தை தேசிய அங்கீகாரம் பெற தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது. 

கபடி, சிலம்பம் உள்ளிட்ட 12 விளையாட்டு போட்டிகளுக்கான முதலமைச்சர் கோப்பை தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இதன்மூலம் பல புதிய திறமைகளை கண்டறிய உள்ளோம். வெற்றி தோல்வி எப்போதும் முக்கியமானதில்லை. பங்கேற்பது தான் முக்கியமான ஒன்று. ஆகவே பங்கேற்பதை யாரும் விட்டுவிட கூடாது. 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை சென்னையில் நடத்த ஒப்புதல் அளித்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச வீரர்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை சென்னை வரவேண்டும். ஏனென்றால் உங்களுக்காக ஒரு சகோதரர் இங்கு இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget