மேலும் அறிய
Chess Olympiad 2022: வெளிநாட்டவரை வென்ற 7 வயது சிறுமி.. அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம் அளித்த அரசு பள்ளி மாணவி ...!
ஏழு வயது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி வெளிநாட்டு நபர் ஒருவரை வெற்றி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வாணிக்கா
187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் 44வது ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் இந்த போட்டியிலே கலந்து கொள்ளாமல் கவனத்தை ஈர்த்துள்ளார், இச்சிறுமி. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி ஷர்வாணிக்கா 7 வயதாகும் இச்சிறுமி செஸ் போட்டி நடைபெறும் இடத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

செஸ் போட்டி நடைபெறும் அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெரிய செஸ் போர்டு, பார்வையாளர்கள் கவரும் வகையிலும் விருப்பப்படுபவர்கள் அதில் விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சிறுமி சர்வாணிக்கா விளையாடுவதை பார்க்க சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த தூதுக்குழு தலைவர் ஒருவர் சிறுமியுடன் விளையாட விருப்பப்பட்டு உள்ளார்.
மேலும் படிக்க: 16 வயதில் தரமான சம்பவம் செய்யும் தமிழ்நாடு 2K கிட் குகேஷ்.. தர வரிசையில் 3-வது இடம்..

அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் போர்டு காயின் உயரம் கூட இல்லாத சர்வாணிக்கா, அருமையாக நகர்த்தி வெற்றியை தன்வசம் ஆக்கி உள்ளார். வெளிநாட்டவர் ஒருவரை தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் வீழ்த்தியது அங்கிருந்த பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமி வெற்றியை பெற்றதைப் பார்த்த வெளிநாட்டு நபர் மிகுந்த மகிழ்ச்சியில் சிறுமியை தூக்கி கையில் வைத்துக் கொண்டு நீங்கள் சிறப்பாக விளையாடினார்கள் என பாராட்டுகளை தெரிவித்தார். இதனை அடுத்த சர்வாணிக்கா கூறுகையில், நான் நேஷனல் ப்ளேயராக இருந்து வருகிறேன். சிறிய வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் மற்றும் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என க்யூட்டாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
சென்னை
Advertisement
Advertisement