SIX Or OUT: சிக்ஸா..? அவுட்டா..? மைக்கேல் நேசரின் நம்பமுடியாத கேட்ச்.. இணையத்தில் பெரும் விவாதம்...!
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர் அணி தொடக்கம் சிறப்பாக அமைத்தது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெறும். இது லீக் தொடர்களில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களின் ஒன்றாகும். 2022- 2023ம் ஆண்டுகளுக்கான பிக் பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், நேற்றைய ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் நேருக்குநேர் மோதின. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன் அடிப்படையில், பிரிஸ்பேன் ஹீட் அணியின்தொடக்க வீரர்களாக காலின் முன்ரோ மற்றும் ஜோஷ் பிரௌன் களமிறங்கினர். அதிரடியாக விளையாட முயற்சித்த காலின் முன்ரோ, 6 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்து 10 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து மூன்றாவது வீரராக உள்ளே வந்த மெக்ஸ்வீனி களமிறங்கியது பிரித்து மேய, அவருக்கு உறுதுணையாக ஜோஷ் பிரௌன் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். சிக்ஸர்களை மழையாய் பொழிந்த ஜோஷ் பிரௌன், 23 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்து 62 ரன்களில் அவுட்டானார்.
This is fascinating.
— KFC Big Bash League (@BBL) January 1, 2023
Out? Six? What's your call? #BBL12 pic.twitter.com/v22rzdgfVz
மறுமுனையில் தன் பங்கிற்கு சிறப்பாக விளையாடிய மெக்ஸ்வீன், 51 பந்தில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, பின்வரிசை வீரர்கள் ஓரளவு அடித்து ஆடினர். 20 ஓவர் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 224 அடித்தது.
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர் அணி தொடக்கம் சிறப்பாக அமைத்தது. தொடக்க வீரர்களான ஜோஸ் பிலிப் 13 பந்தில் 27 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 24 பந்தில் 41 ரன்கள் அடித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோர்டன் சில்க் 23 பந்தில் 41 ரன்கள் அடிக்க, ஹைடன் பெர் 15 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.
18 வது ஓவரில் சிட்னி சிக்ஸர்ஸ் 199 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோர்டன் சில்க், லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடித்தார். அப்போது எல்லைக்கோட்டின் அருகே நின்றிருந்த நேசர் கேட்ச் செய்தார். முதலில் எல்லை கோட்டிற்கு முன்பு கேட்ச் செய்த நேசர், நிலை தடுமாறி எல்லை கோட்டிற்குள் சென்றார். நேசர் பந்தை காற்றில் வீசினார்.
Michael Neser's juggling act ends Silk's stay!
— cricket.com.au (@cricketcomau) January 1, 2023
Cue the debate about the Laws of Cricket... #BBL12 pic.twitter.com/5Vco84erpj
மைதானத்திற்கு வெளியே சென்ற அவர், பந்தை மீண்டும் ஒருமுறை மேலே தள்ளிவிட்டு எல்லை கோட்டிற்குள் வந்து கேட்ச் செய்தார்.
இதை பார்த்த பேட்ஸ்மேன் சில்க் முதலில் இது அவுட் இல்லை என்று நடுவர்கள் மற்றும் வீரர்களிடம் முறையிட்டார். பின்னர் நடுவர்கள் மூன்றாம் நடுவரை தொடர்பு கொண்டு அது அவுட் என உறுதி செய்தனர். தொடர்ச்சியாக சில்ஸ் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
தற்போது, இணையத்தில் ஒரு சிலர் அவுட் என்றும், நாட் அவுட் என்றும் விவாதம் நடத்தி வருகின்றனர்.