மேலும் அறிய

IND vs AUS U19 WC Final: 254 ரன்கள் இலக்கு! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய இளம்படை?

19 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு 254 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள வில்லோவ்மோரே மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல்1 மணிக்கு தொடங்கியது.  

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை ஹாரி டிக்ஸன் மற்றும் சாம் ஹான்ஸ்டஸ் ஆகியோர் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரன்கள் சேர்க்கவேண்டும் என நினைத்து தேவையற்ற ஷாட்களை தவிர்த்து வந்தனர். ஆனால் 8 பந்துகளை எதிர்கொண்ட சாம் தனது விக்கெட்டினை ராஜ் லிம்பானி பந்தில்  ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார். 

அதன் பின்னர் வந்த கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இருவரும் இணைந்து 20 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 90 ரன்களை எட்டவைத்துவிட்டனர். இருவரும் அரைசதத்தினை நெருங்கிக் கொண்டு இருந்தபோது இந்த கூட்டணியை இடது கை வேகப்பந்து வீச்சாளர் நமன் திவாரி கைப்பற்றினார். ஹாரி டிக்ஸன் 42 ரன்னிலும், ஹூஹ் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 

வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சற்று சரிவை உண்டாக்கும் என எதிர்பார்த்தபோது, களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் சிறப்பாக விளையாடி சூழலை ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக மாற்றினார். ஆனால் ஹர்ஜாஸ் சிங் தனது விக்கெட்டினை 64 பந்தில் 55 ரன்கள் சேர்த்த நிலையில் சௌமி பாண்டே பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் அதிரடியாக 3 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணியின் பந்துவீச்சாளார்கள் சற்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் இரு அணி வீரர்களும் மிகவும் தீவிரமாக விளையாடினர். குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் டைல் எண்டர்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியால் தான் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியவில்லை.  இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள்  சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளும் நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பந்து வீச்சாளர் முருகன் அபிஷேக் 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றவில்லை என்றாலும் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக விளையாடினார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget