Hero Asian Champions Trophy 2023: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்; கோப்பையை தட்டித் தூக்கும் அணி எது? போட்டி அட்டவணை விபரம் இதோ..!
Hero Asian Champions Trophy; 2023ஆம் ஆண்டுக்கான ஹிரோ ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பைக்கான அட்டவணை மற்றும் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
Hero Asian Champions Trophy; 2023ஆம் ஆண்டுக்கான ஹிரோ ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பைக்கான அட்டவணை மற்றும் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுப் பின்னர் சென்னையில் ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடர், ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 15 லீக் போட்டிகள் 5வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டிகள், இரண்டு அரையிறுதிப் போட்டிகள், 3வது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 20 போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், கொரியா, மலேசியா ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (20.07.2023) நடைபெற்ற ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 கோப்பை அறிமுகம், "பொம்மன்" இலச்சினை (BOMMAN MASCOT) வெளியிட்டு விழா நடைபெற்றது. மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் "பாஸ் தி பால்" கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆசிய கோப்பை 198ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 16 அணிகள் அறிமுகமாகி விளையாடியுள்ளன.
போட்டி அட்டவணை:
வியாழன், 3 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: கொரியா v ஜப்பான்
- மாலை 6.15 மணி: மலேசியா v பாகிஸ்தான்
- இரவு 8.30 மணி: இந்தியா v சீனா
வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: கொரியா v பாகிஸ்தான்
- மாலை 6.15 மணி: சீனா v மலேசியா
- இரவு 8.30 மணி: இந்தியா v ஜப்பான்
(சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2023 - போட்டிகள் எதுவும் இல்லை)
ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: சீனா v கொரியா
- மாலை 6.15 மணி: பாகிஸ்தான் v ஜப்பான்
- இரவு 8.30 மணி: மலேசியா v இந்தியா
திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: ஜப்பான் v மலேசியா
- மாலை 6.15 மணி: பாகிஸ்தான் v சீனா
- இரவு 8.30 மணி: கொரியா v இந்தியா
(செவ்வாய்கிழமை, 8 ஆகஸ்ட் 2023 - போட்டிகள் எதுவும் இல்லை)
புதன், 9 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: ஜப்பான் v சீனா
- மாலை 6.15 மணி: மலேசியா v கொரியா
- இரவு 8.30 மணி: இந்தியா v பாகிஸ்தான்
(வியாழன், 10 ஆகஸ்ட் 2023 - போட்டிகள் எதுவும் இல்லை)
வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2023
- 15:30: 5/6வது இடம் – லீக் சுற்றில் 5வது இடம் பிடித்த அணி v லீக் சுற்றில் 6வது இடம் பிடித்த அணி
- மாலை 6 மணி அரையிறுதி 1 - லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த அணி v லீக் சுற்றில் 3வது இடம் பிடித்த அணி
- இரவு 8.30 மணி: அரையிறுதி 2 - லீக் சுற்றில் 1வது இடம் பிடித்த அணி v லீக் சுற்றில் 4வது இடம் பிடித்த அணி
சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2023
- மாலை 6 மணி 3/4வது இடம் – லூசர் SF1 v லூசர் SF2
- இரவு 8.30 மணி: இறுதிப்போட்டி - வெற்றியாளர் SF1 v வெற்றியாளர் SF2