ஆசிய விளையாட்டு போட்டி: தடகளப் போட்டியில் வெள்ளி, வெண்கலத்தை வென்று அசத்திய இந்திய வீரர்கள்..!
ஆடவர் 1.500 மீ ஓட்டப்பந்தய பிரிவில் அஜய்குமார் வெள்ளிப் பதக்கத்தையும், ஜான்சன் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டி: 1.500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளனர். ஆடவர் 1.500 மீ ஓட்டப்பந்தய பிரிவில் அஜய்குமார் வெள்ளிப் பதக்கத்தையும், ஜான்சன் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் மற்றும் ஜான்சன் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இருவரும் முறையே 3:38.94 மற்றும் 3:39.74 நேரங்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
It's raining medals.
— Athletics Federation of India (@afiindia) October 1, 2023
Ajay Kumar Saroj wins silver, while Jinson Johnson bronze in men's 1500m.#AsianGames
2 Medals in 1500m Mens.
— IndiaSportsHub (@IndiaSportsHub) October 1, 2023
Silver and Bronze 🎉
What a race by #AjayKumarSaroj and #Jinsonjohnson.
Absolutely brilliant at #AsianGames pic.twitter.com/R0T01d34hs
முன்னதாக, அவினாஷ் சேபிள் (ஆண்கள் 3000மீ ஸ்டீபிள் சேஸ்) மற்றும் தஜிந்தர்பால் சிங் டூர் (ஆண்கள் குண்டு எறிதல்) ஆகியோர் தங்கம் வென்ற பிறகு, பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது தவிர ஆடவர் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியா வென்றது. பெண்களுக்கான 800 மீட்டர் ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் நந்தனி அகசாரா வெண்கலப் பதக்கம் வென்றார். முரளி ஸ்ரீஷன் தனது போட்டியில் 0.03 மீற்றர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை வெல்வதை தவறவிட்டார். இந்த போட்டியில் சீன வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் சீமா புனியா 58.62 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை பதக்கங்களின் எண்ணிக்கையை 51 ஆக உயர்த்தியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இதுவரை இந்தியா:
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெரும்பாலான போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இம்முறை இதுவரை பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வந்துள்ளன. அதே நேரத்தில் தடகளப் போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து பதக்கங்கள் வென்று வருகின்றனர்.