AFC Womens Asian Cup 2022: 18 ஆண்டுகளுக்கு பிறகு.. ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் களமிறங்கும் 5 தமிழக வீராங்கனைகள்
கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன், இந்திய மகளிர் அணி ஏ.எஃப்.சி தொடரில் களமிறங்கியபோது, ஒரு தமிழக வீராங்கனை கூட அணியில் இடம் பெறவில்லை.
ஏ.எஃப்.சி பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று, இந்தியா - இரான் அணிகள் மோத உள்ளன. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி ஏ.எஃப்.சி தொடரில் களமிறங்குகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
சந்தியா, மாரியம்மாள், செளமியா, இந்துமதி, கார்த்திகா என தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கின்றனர். கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன், இந்திய மகளிர் அணி ஏ.எஃப்.சி தொடரில் களமிறங்கியபோது, ஒரு தமிழக வீராங்கனை கூட அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் தொடருக்கு ஐவர் தேர்வு செய்யப்படிருப்பது குறிப்பிட வேண்டியதாகும்.
🚨 IT'S D-DAY 🚨
— Indian Football Team (@IndianFootball) January 20, 2022
The Women's @afcasiancup begins today, and the #BlueTigresses 🐯 🇮🇳 take on Iran 🇮🇷 in their opening game of Group 🅰️ 🤩
⏰ 7.30 PM IST 🕢
📍 DY Patil Stadium 🏟️#INDIRN ⚔️ #WAC2022 🏆 #BackTheBlue 💙 #ShePower 👧 #IndianFootball ⚽ pic.twitter.com/taIZ09GdGa
குரூப் ஏ பிரிவில் இந்தியா, சீனா, சீனா தைபே, இரான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், முதல் போட்டியில் இந்திய அணி இன்று விளையாட இருக்கிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி, சந்தியா ஆகிய இரு வீராங்கனைகள் ஸ்குவாடில் இடம் பிடித்திருக்கின்றனர். மற்ற மூன்று வீராங்கனைகளும் சப்ஸ்ட்யூட்டாக பெயரிடப்பட்டுள்ளனர். இன்று மாலை 7.30 மணிக்கு இந்தியா - இரான் அணிகள் மோதும் போட்டி தொடங்குகிறது. மும்பை டி.ஒய் படில் மைதானத்தில் நடக்கும் போட்டியை, யூரோ ஸ்போர்ட் சேனலில் நேரலையில் காணலாம்.
ஏ.எஃப்.சி பெண்கள் கால்பந்து தொடரில் களமிறங்கும் இந்திய அணிக்கு, இந்திய கால்பந்து வீரர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். எனினும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக பெண்கள் பங்கேற்கும் விளையாட்டுகளுக்கும் இன்னும் மக்கள் ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் என இந்திய மகளிர் கால்பந்து அணி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்