Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tirupati Stampede: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 7 பேர் காயமடைந்துள்ளனர்.
திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல்:
திருமலை மலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்திற்கான, டிக்கெட்டுகள் இன்று காலை வழங்கப்பட இருந்தன. ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்தை காண, நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பொதுமக்கள் நேற்று மாலை முதலே மலைகோயிலில் குவிய தொடங்கியதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த டிக்கெட்டுகளுக்காக ஒவ்வொரு டிக்கெட் கவுண்டரிலும், பக்தர்களின் பெரும் கூட்டம் குவிந்தது. பக்தர்கள் கட்டுக்கடங்ட்காமல் குவிந்ததால், விஷ்ணு நிவாசத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
6 பேர் பலி - தமிழக பெண்கள் இருவர்
கடும் கூட்ட நெரிசலிலும் பக்தர்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சு விடாமல் திணறிய பக்தர்கள் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலா ஆகிய இருவரும் அடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
తిరుపతిలో వైకుంఠ సర్వదర్శనం టోకెన్ల జారీలో అపశృతి! #TirupatiStampede #Tirupati #Tirumala #TirupathiDevasthanam #tirupatibalaji#SaveTTD pic.twitter.com/kBX9lOkMx5
— Ysdaily (@Ysdaily02) January 9, 2025
Who takes responsibility of this stampede? #Tirupati #TirupathiDevasthanam pic.twitter.com/goUrKOWEtP
— Ritu Jaipur (@Ritukd31) January 9, 2025
ஆந்திர முதலமைச்சர் வேதனை
சம்பவம் குறித்து அறிந்ததும் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாகவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் நிலவரம் குறித்து டிஜிபி, டிடிடி இஓ, மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருடன் கேட்டறிந்த அவர், பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், அதிகாரிகளால் ஏன் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், இரண்டு பெண் பக்தர்களுக்கு காவல்துறை சிபிஆர் வழங்குவது மற்றும் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்களில் மாற்றுவது போன்ற வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
பிரதமர் மோடி இரங்கல்:
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் வேதனை அடைந்தன.நெருக்கமான மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆதரவு இருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மன்னிப்பு கோரிய தேவசம் போர்ட்:
சம்பவம் தொடர்பாக பேசிய திருப்பதி தேவசம் போர்ட் உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, “
ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வினியோகம் செய்ய, 91 கவுன்டர்களை திறந்தோம்.. நெரிசல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் இறந்தனர், 40 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை செய்து தருகிறோம். இது எப்போதும் நடந்தது இல்லை. TTD வரலாற்றில் நடந்த சம்பவம் குறித்து நான் உண்மையாகவே பக்தர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என பேசியுள்ளார்.