Instagram Update: வந்தாச்சு புது அப்டேட்... இனி யூ ட்யூபைப்போல இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?
யூ ட்யூபைப்போல, இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான் இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் ஒரு வரி விளக்கம்.
சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த தளத்தில் பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர். அத்துடன் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ்தான் பயனர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் தருகிறது.
அந்த வரிசையில், யூட்யூப் சானலில் உள்ள சப்ஸ்கிர்ப்ஷன் ஆப்ஷனைப் போல இனி இன்ஸ்டாகிராமிலும், சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் வர உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதற்கான சோதனை முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இந்த அப்டேட் மூலம், ஃபாலோவர்ஸ் அவர்களுக்கு பிடித்த பிரபலங்களை, பார்க்க விரும்பும் கண்டெண்ட் பக்கங்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். வீடியோ கண்டெண்ட் தயாரிப்பவர்களும், சப்ஸ்கிரைப்பர்களுக்கென தனி பிரத்யேக வீடியோ அல்லது புகைப்பட கண்டெண்ட் அடங்கிய பதிவுகளை பதிவேற்றலாம்.
View this post on Instagram
இந்த சப்ஸ்கிரிப்ஷன் வசதி மூலம், இனி இன்ஸ்டாவில் வீடியோ / ரீல்ஸ் பதிவேற்றம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்திருக்கிறது. யூட்யூபை போல, இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான் இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் ஒரு வரி விளக்கம். தொடக்கமாக, அமெரிக்காவில் இந்த அப்டேட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில், இந்தியாவுக்கு இந்த அப்டேட் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்