Watch Video : 31 லட்சம் ருத்ராட்சங்கள்.. பஸ்ம ஆரத்தி.. கோலாகலமாக நிகழ்ந்த சிவராத்திரி விழா
உஜ்ஜைனின் மஹாகாலேஸ்வர் கோயிலுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக முதல் ஆரத்தியான பஸ்ம ஆரத்தியைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மகா சிவராத்திரியை ஒட்டி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனின் மஹாகாலேஸ்வர் கோயிலுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக முதல் ஆரத்தியான பஸ்ம ஆரத்தியைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
உஜ்ஜைன் மஹாகாலேஸ்வர் என்பது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்கள் ஒன்று. இது ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.
#WATCH | 'Bhasma Aarti' being performed at Mahakaleshwar Jyotirlinga temple in Ujjain, Madhya Pradesh, on the occasion of #MahaShivaratri pic.twitter.com/glpjpZLT5g
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) February 17, 2023
புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
அவரும் அதற்கு சம்மதித்து வேத விற்பன்னர்களையும், துறவிகளையும் அழைத்துவந்து சிவனை நோக்கி பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து ஒரு லிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மஹா காலேஷ்வர் தோன்றி வேதாளத்தை அழித்தார்.
அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாலரும் ஆவேசம் தணிந்தார். பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் ஜோதிவடிவில் அதில் கலந்து ஜோதிர்லிங்கமானார்.
இத்தகைய தல வரலாறு கொண்ட உஜ்ஜைன் மகா காலேஸ்வரர் கோயிலில் இன்று பிரம்ம ஆரத்தி தொடங்கி அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்படுகின்றன.
#WATCH | A 31.5 feet tall 'Rudraksha Shivling' has been made in Gujarat's Dharampur by using around 31 lakhs Rudrakshas.#MahaShivaratri pic.twitter.com/60W6416SPi
— ANI (@ANI) February 18, 2023
மகா சிவராத்திரி வரலாறு:
தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார்.
இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார்.
எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார்.
இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.