Vinayagar Chaturthi 2023: திருவண்ணாமலையில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த இரட்டை பிள்ளையார்
திருவண்ணாமலையில் இரட்டை பிள்ளையார் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விநாயக சதுர்த்தி என்ற மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார். இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலை இரட்டை பிள்ளையார் சன்னதியில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
உலக பிரசிதிபெற்ற திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரட்டை பிள்ளையார் கோவில் இரட்டை பிள்ளையாருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அருகம்புல் மாலை, மலர் மாலைகள் சாற்றப்பட்டு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து இரட்டை பிள்ளையாருககு கொழுக்கட்டை , சுன்டல், கேசரி போன்றவைகள் பூஜையில் வைக்கப்பட்டது. மேலும் சிவாச்சாரியார்கள் மேள, தாளங்கள் முழங்க இரட்டை பிள்ளையாருககு உச்சிக்கால பூஜையின்போது இரட்டை பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டை, சுன்டல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறு குறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பழம் பூ அச்சு விநாயகர் சிலை, கொடை கம்பு மணிலா உள்ளிட்ட பூஜைப் பொருட்களை லட்சக்கணக்கில் முதலீடு செய்து விற்பனை செய்வது வழக்கம், இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாபாரிகள் திருவண்ணாமலையில் விநாயகருக்கு படைப்பதற்கு தேவையான பூஜைப் பொருட்களை முதலீடு செய்து விற்பனை செய்வதற்காக சாலையோரங்களிலும் கடைகளிலும் மொத்தமாகவும் முதலீடு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட இன்று காலை முதல் விநாயகர் சிலைகள் பூஜை பொருட்களை வாங்குவதற்காக மக்கள் தேரடி வீதி, ரவுண்டானா சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூடி விநாயகருக்கு பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர், இதனால் இந்த ஆண்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், குறிப்பாக இந்த ஆண்டு விநாயகர் சிலையில் பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டு பிரத்தியேகமாக விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது