Vaikasi Visakam: கரூர் மாவட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகம்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி பாலசுப்பிரமணியசுவாமிக்கு நேற்று காலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 108 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து பாலசுப்ரமணிய சுவாமிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்ட சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
படி பூஜை
பின்னர் மாலை 7 மணி அளவில் படிபூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முதல் பரியில் வேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு படியிலும் வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூக்கள், வெற்றிலை வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் தானோஜி மலை, வெங்கமேடு. பசுபதிபாளையம், காந்திகிராமம் வெளியிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமீ தரிசனம் செய்தன.
பாலமுருகன் கோவில்
இதே போல் கரூர் அண்ணாச்சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனை ஒட்டி பாலமுருகனுக்கு பால், பன்னீர் ,மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்ட. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கு மகா தேவாரதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல்
புகலிமலை பாலசுப்ரமணியசுவாமி கோவில் சுவாமிக்கு பால் ,தயிர், பன்னீ, இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதே போல் நன்செய் புகழ் ஊர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி பாலமலை சுப்பிரமணிய சுவாமி நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
வேலாயுதம் பாளையம்
காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவில் சுவாமிக்கு பால், பழம் ,விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடந்தது. இதே போல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.