மேலும் அறிய
Advertisement
திருவாரூர்: மணக்கால் அய்யம்பேட்டை காளியம்மன் ஆலய காளி கட்டு திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இந்த காளி கட்டு திருவிழா மேளதாளங்கள் முழங்க நடைபெறும். ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் காளி கட்டிய நபர் வலம் வந்து வீதி வீடாக சென்று அருள் பாலிப்பார்
மணக்கால் அய்யம்பேட்டை காளியம்மன் ஆலயத்தின் காளி கட்டு திருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
தமிழகம் முழுவதும் ஆடி மாதத்தை முன்னிட்டு கோவில்களில் காவடி எடுத்தல் பூச்சட்டி எடுத்தல் திருவிழாக்கள் என அனைத்து கோவில்களிலும் சிறப்பான முறையில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாதத்தை முன்னிட்டு சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு நாள்தோறும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புகழ்பெற்ற காலிகட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மணக்கால் அய்யம்பேட்டை மேலத் தெருவில் காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இந்த ஆலயத்தில் காளி கட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் காளி கட்டிய நபர் கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து ஆலயத்தை அடைவார். முன்னதாக காளி கட்டும் நபர் காப்பு கட்டி விரதம் இருந்து இதில் பங்கேற்பார்.
இந்த காளி கட்டு திருவிழா மேளதாளங்கள் முழங்க நடைபெறும். ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் காளி கட்டிய நபர் வலம் வந்து வீதி வீடாக சென்று அருள் பாலிப்பார். இந்த காளி கட்டு திருவிழாவை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு காளியம்மனே நேரடியாக தங்கள் வீட்டிற்கு வருவதாக நினைத்து ஆரத்தி எடுத்து அர்ச்சனை செய்து மாவிளக்கு போட்டு வழிபாடு நடத்துவர்.
இந்த காளி கட்டு திருவிழாவில் காளி கட்டிய நபர் முக்கிய வீதிகளில் காளி ஆட்டம் ஆடியபடி வலம் வருவார். இந்த நிகழ்ச்சியில் மனக்கால் அய்யம்பேட்டை பெரும்பண்ணையூர் செம்மங்குடி அரசவனங்காடு நன்னிலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காளி கட்டு திருவிழாவை காண்பதற்காகவும் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பெருமளவு வருகை தந்துள்ளனர். அதேபோன்று மணக்கால் அய்யம்பேட்டையில் உள்ள கீழத்தெரு காளியம்மன் ஆலயத்தின் காளி கட்டு திருவிழாவும் நேற்று நடைபெற்றது .
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion