மேலும் அறிய

திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்றும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழா இன்று தொடங்கி பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். 10-ம் நாள் அன்று ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும். இன்று அதிகாலையில்  திருக்கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து காலை 07.00 மணியளவில் தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் சந்நதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தின் அருகில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் எழுந்தருளினர்.

திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

 ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் பக்தர்கள்  சாமி தரிசனம் 

 பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என முழகங்களுடன் தரிசனம் செய்தனர். கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு  நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி,  வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் நான்கு  மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.  இன்று விடுமுறை நாட்கள் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமா இருந்தது,குறிப்பாக ஆந்திர ,தெலுங்கானா பகுதிகளில் இருந்து பக்தர்களின் வருகை வெகுவா அதிகரித்து காணப்படாது.இதனால் பக்தர்கள் நீண்ட நேரம்  வரிசையில் காதுதிருந்து சாமிதரிசனம்  செய்தனர்.  இந்த கொடியேற்றத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சமிதரிசனம் செய்தனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். 

தட்சிணாயின புண்ணிய கால சிறப்பு பற்றி சிவாச்சாரியாரிடம் இது குறித்து கேட்ட போது, 

‛‛அண்ணாமலையார் கோவிலில் வருடத்தில் நான்குமுறை கொடியேற்றம் நடைபெறும் தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம் , ஆடிபுரம் என கொடியேற்றம் நடைபெறும். அதில் ஒன்றான தட்சிணாயின புண்ணியகாலம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைப்பெற்றும் மற்றும் தீப ஆராதனைகளும் செய்யப்பட்டன. சகல ஜிவ ராசிகளும் இன்புற்று வாழவும் நோயில் இருந்து மக்களை காப்பாற்றிக்கொள்ள அண்ணாமலையாரை பிரார்த்தனை செய்து கொள்வோம்,’’ என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Embed widget