மேலும் அறிய

Tirupati: பக்தர்களே! ஜனவரி மாதம் திருப்பதியில் தங்குவதற்கு ரூம் வேண்டுமா? 3 மணிக்கு முன்பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் தங்கும் அறைக்கான முன்பதிவு இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்குகிறது.

ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி கோயில் உலகப்புகழ்பெற்ற கோயில் ஆகும். இந்தியாவிலே பணக்கார கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரசிகர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஜனவரி மாத தரிசனம்:

குறிப்பாக, பெருமாளுக்கு மிகவும் உகந்த மார்கழி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் போட்டி போட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி என ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பக்தர்கள் பல மடங்கு குவிவார்கள்.

இந்த நிலையில், ஜனவரி மாத சாமி தரிசனத்திற்கான சிறப்பு டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இணையதள டிக்கெட் முன்பதிவு சேவை இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதேபோல, திருப்பதியில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவும் காலை 11 மணிக்குத் தொடங்கியது.

3 மணிக்கு முன்பதிவு:

இது மட்டுமின்றி, ஜனவரி மாதத்தில் திருப்பதியில் தங்கும் அறைகளுக்கான இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதனால், திருப்பதியில் தங்கும் அறை வேண்டும் பக்தர்கள் இன்று மதியம் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி மாதத்திற்கான சாமி தரிசன சிறப்பு டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும், ஜனவரி மாதத்தின் முக்கிய கொண்டாட்ட நாளான வைகுண்டு ஏகாதசி தினத்திற்கான ஜனவரி 10 முதல் ஜனவரி 11ம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு மட்டும் செய்யப்படவில்லை. அதேபோல, அங்கபிரதட்சண டிக்கெட்டுகள் அடுத்தாண்டு ஜனவரி 1, 2. 9 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கும் முன்பதிவு செயயப்படவில்லை.

திருப்பதியில் குவியும் பக்தர்கள்:

மேலும், ஆர்ஜித சேவையையும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி, ஜனவரி 9ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கான சாமி தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு நிறைவு பெற்றுவிட்டது. அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கான லக்கி டிப், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கான முன்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாதத்தில் வழக்கத்தை விட திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இருக்கும் என்பதால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget