மேலும் அறிய

Thiruppavai 9: சாதனைகளை படைக்க, சில சுகங்களை துறக்கவேண்டும் - உணர்த்தும் ஆண்டாள்

Margazhi 9: மார்கழி 9வது நாள்: மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.

எட்டாவது பாடல் மூலம் வெளிப்புறத்தில் நிகழும் நிகழ்வை சுட்டி காட்டி, தோழிகளை எழுப்பும் ஆண்டாள், ஒன்பதாவது பாடல் மூலம் சுகத்தை தவிர்த்தால்தான் இறைவன் அருள் கிடைக்கும் என தோழியிடம் கூறுவது போல காட்சியிருக்கிறது

ஒன்பதாவது பாடல் விளக்கம்:

திருப்பாவை ஒன்பதாவது பாடலில், தன்னுடைய தோழி எப்படி உறங்குகிறார் என்பதை ஆண்டாள் காட்சி படுத்துகிறார்.

அவருடைய தோழி, அருமையான விளக்குகளை ஏற்றி வைத்து, நவரத்தினங்களால் செய்யப்பட்ட  கட்டிலில், நல்ல மணம் கமல வாசனை திரவியங்களுடன் என தூங்குவதற்கு தேவையான சுகங்களை ஏற்படுத்தி கொண்டு உறங்குவதாக காட்சி படுத்துகிறார். இதையடுத்து பெண்ணே, இந்த சுகங்களை எல்லாம் துறந்தால்தான் இறைவன் அருள் கிடைக்கும், ஆகையால் எழுந்தருள்வாயாக என தோழிக்கு கூறுகிறார்.

மேலும், மாமன் மகளே கதவை திற; சரி,  நீ எந்திரிப்பது போல் தெரியவில்லையே என உணர்ந்து, தோழியின் அம்மாவிடம் கூறுகிறார்; அத்தையே, நீயும் பார்த்து கொண்டு இருக்கின்றாயே, உன் மகளை எழுப்பு, உன் மகளுக்கு காது கேட்காமல் போய்விட்டதா, ஊமையாகி விட்டாளா, மந்திரத்துக்கு ஏதும் கட்டுப்பட்டு இப்படி உறங்குகிறாளா என கூறுகிறார்

சரி, இத்தனைக்கும் உட்பட்டிருந்தாலும் கூட, அத்துன்பத்திலிருந்து நிவர்த்தி செய்ய இறைவனின் நாமத்தை சொன்னால் நீங்கி விடும். எனவே, அவளை எழுப்பி விடு என அத்தையிடம் ஆண்டாள் தெரிவிக்கிறார்.

இப்பாடல் மூலம், சாதனைகள் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்றால், சில சுகங்களை தவிர்க்க வேண்டும் என ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார். 

திருப்பாவை ஒன்பதாவது பாடல்:

தூமணி மாடத்து

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

சூடி கொடுத்த சுடர்கொடி ஆண்டாள்:

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Neeraj Chopra :  ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Neeraj Chopra :  ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Rajinikanth: ரஜினியிடம் அந்த கேள்விகள் மட்டும் கேட்கக்கூடாதாம்! சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா?
Rajinikanth: ரஜினியிடம் அந்த கேள்விகள் மட்டும் கேட்கக்கூடாதாம்! சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Embed widget