மேலும் அறிய

என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!

கடந்த வாரம் அரசு மருத்துவர் மீது கொலை முயற்சி நடந்த நிலையில், இன்று தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விஜய்யின் அரசியல் வருக,. த.வெ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி, அ.தி.மு.க.. பா.ஜ.க. ஆகியவற்றின் வியூகம் ஆகியவற்றை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மருத்துவர் மீது கொலை முயற்சி:

கடந்த சட்டசபைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகள், மகளிர் உரிமைத் தொகை குளறுபடி என பல நெருக்கடிகளை ஆளுங்கட்சி சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக நடக்கும் சில அசம்பாவிதங்கள் தமிழக அரசுக்கு அடுத்தடுத்து தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த புதன்கிழமை சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தார். அதிர்ஷ்டவசமாக மருத்துவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியை கொலை:

இந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அ.தி.மு.க, பா.ம.க., த.வெ.க. என பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில், தஞ்சையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் அரசுப்பள்ளியில் வகுப்பறையின் உள்ளே புகுந்து இளம் ஆசிரியையை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் கொலை:

தஞ்சையில் ஆசிரியை ரமணி பள்ளியின் உள்ளே புகுந்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் சில மணி நேரத்திலே ஓசூரில் மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் கண்ணன் என்பவரை இளைஞர் ஒருவர் சாலையில் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளார். நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை செய்தவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு தலைவலி:

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடந்த ஏடிஎம் கொள்ளைகள். ஆம்ஸ்ட்ராங் படுகொலை, அவ்வப்போது நடக்கும் குற்றச் சம்பவங்கள் ஆகியவைகள் ஆட்சிக்கு பின்னடைவாக அமைந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற மருத்துவர் மீதான கொலைமுயற்சி தி.மு.க. அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், ஒரே நாளில் மாணவ மாணவிகளின் கண் முன்னே ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும், நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதும் மு.க.ஸ்டாலின் அரசுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்பின்னணி இல்லாத ஒருவர் திடீரென குற்றம் செய்வதற்கு அரசு பொறுப்பேற்கா முடியாது என்றாலும், குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடங்களில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுவும் பள்ளியில் நடைபெற்ற கொலை சம்பவம் என்பதால் வருங்காலங்களில் பள்ளி, மருத்துவமனை என எந்தவொரு பொது இடத்திலும் கொலை போன்ற குற்றச் சம்பவங்களை எடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
School Leave:  பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
School Leave: பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Embed widget