மேலும் அறிய

Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்

Thanjavur School Teacher Death: அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்- எடப்பாடி பழனிசாமி.

அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் இன்று பட்டப் பகலில் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாடம்  நடத்திக்கொண்டிருக்கும்போதே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.  26 வயதான ஆசிரியை ரமணியை, 30 வயதான மதன்குமார் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ரமணியைப் பெண் கேட்டு வீட்டுக்கும் சென்றுள்ளார். ஆனால் அவருக்குப் பெண் தர ரமணியின் பெற்றோர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மதன்குமார், ரமணியின் கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார். 

அதேபோல கடந்த வாரம் கிண்டி அரசு மருத்துவமனையில், சிகிச்சை சரியாக அளிக்கவில்லை என்று கூறி நோயாளியின் மகன், அரசு மருத்துவரைக் கத்தியால் பல்வேறு இடங்களில் குத்தினார். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளதாக ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

நிர்வாகத் திறனற்ற திமுக அரசு

விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்துவதா?

ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
Embed widget