மேலும் அறிய

Thai Amavasai Tharpanam: தை அமாவாசை! எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்? என்ன செய்யலாம்?

Thai Amavasai 2024 Tharpanam Time: ஒவ்வொரு மாத அமாவாசையிலும் முன்னோர்களை வழிபட முடியாதவர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசையை தவற விடக்கூடாது.

தை அமாவாசை (Thai Amavasai) தினம் நாளை வரும் நிலையில், இந்த நாளில் முன்னோர்களுக்கு எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது பற்றி காணலாம். 

தை அமாவாசை:

ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை வரும் நிலையில், இந்த நாளானது முன்னோர்களை வழிபட சிறந்த நாளாக கருதப்படுகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாத அமாவாசையிலும் முன்னோர்களை வழிபட முடியாதவர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசையை தவற விடக்கூடாது. இதில் தை மாதம் அமாவாசையானது பூலோகத்தில் வந்த முன்னோர்கள் பித்ரு லோகத்திற்கு திரும்புவதாக ஐதீகமாகும். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து நீத்தார் வழிபாடு எனப்படும் தர்ப்பணம் செய்தால் அவர்கள் தங்கள் சந்ததிகளுக்கு நல்லாசிகள் வழங்குவார்கள் என்பது ஐதீகமாகும். 

தர்ப்பணம் எப்போது தர வேண்டும்?

அந்த வகையில் தை அமாவாசையானது இந்தாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வருகிறது. வெள்ளிக்கிழமை வரும் இந்த அமாவாசை காலை 8.05 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது. இந்த திதி  பிப்ரவரி நாளை தொடங்கும் நிலையில் காலையிலேயே நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. குறிப்பாக காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தர்ப்பணம் செய்ய சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது. 

எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பண வழிபாடு செய்பவர்கள் வீட்டில் முன்னோர்கள் புகைப்படம் முன்பு இலை போட்டு படையலிட்டு சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் பசுமாட்டுக்கு கீரை, இயலாதவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல தானங்கள் செய்யலாம். தை அமாவாசை விரதத்தை தாய், தந்தை இல்லாத ஆண்கள் மற்றும் கணவர் இல்லாத பெண்கள் ஆகியோர் மேற்கொள்ளலாம். ஆறு, கடல் போன்ற ஓடும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வது சிறந்ததாகும். 

என்ன செய்ய வேண்டும்?

தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளிப்பதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்நாளில் மாமிசம், வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. அதேபோல் தர்ப்பணம் செய்யும் எள்ளை மற்றவர்களிடம் கடனாக பெறக்கூடாது. சூரியன் இருக்கும் கிழக்கு திசையை பார்த்தபடி தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முடிந்தவரை தை அமாவாசை நாளில் கோயிலுக்கு சென்றும் வழிபடலாம்.  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம்: மலைப்பகுதி 'சிவப்பு மண்டலம்' – ட்ரோன்களுக்கு காவல் ஆணையர் தடை!
திருப்பரங்குன்றம் தீபம்: மலைப்பகுதி 'சிவப்பு மண்டலம்' – ட்ரோன்களுக்கு காவல் ஆணையர் தடை!
2,668 அடி மலையில் ஒளிரும் மகா தீபம்! ஒரு சொட்டு நெய்யின் பின்னணியில் இத்தனை வரலாறா?
2,668 அடி மலையில் ஒளிரும் மகா தீபம்! ஒரு சொட்டு நெய்யின் பின்னணியில் இத்தனை வரலாறா?
கார்த்திகை தீபம் 2026: நவம்பர் 24-ல் வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தீபம் 2026: நவம்பர் 24-ல் வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தீபத்திற்கு இன்னும் சில நாட்கள்தான்! வீட்டில் இப்போதே செய்ய வேண்டிய 8 முக்கியமான வேலைகள்!
கார்த்திகை தீபத்திற்கு சில நாட்கள்தான்! வீட்டில் இப்போதே செய்ய வேண்டிய 8 முக்கியமான வேலைகள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Embed widget