புவனாசிப்பட்டியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா...
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே புவனாசிப்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன், விநாயகர், முருகன், தெய்வங்கள் அடங்கிய ஆலயம் அமைந்துள்ளது.
கரூர் அருகே புவனாசிப்பட்டியில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே புனவாசிப்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன், விநாயகர், முருகன், தெய்வங்கள் அடங்கிய ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று விழா கமிட்டியினர், பொதுமக்கள் முடிவெடுத்து கோவில் புனரமைக்கும் பணி நடைபெற்றது.
தற்போது கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி கருப்பத்தூர் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் கும்பத்திற்கு சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, பூர்ணாஹூதி, திரவ்யாஹூதி, நாடிசந்தனம், மகாதீபாராதனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை நான்காம் கால வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை மேளதாளம் வழங்க ஊர்வலமாகக்கொண்டு வந்து கலசத்திற்கு புனித நீரினை ஊற்றினர்.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில் புவனாசிப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. புவனாசிப்பட்டியை சேர்ந்த பெரிய பண்ணை, நடு பண்ணை, சின்ன பண்ணை வகையறா பங்காளிகள், மாமன் மைத்துனர்கள், 600-க்கும் மேற்பட்ட தலைக்கட்டுகள் கொண்ட குடும்பத்தினர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அரவக்குறிச்சி அணைப்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கரிய காளியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அணைப்பாளையம் கிராமம், காங்கேயம் பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ காரிய காளியம்மன், அருள்மிகு ஸ்ரீ கருப்பணசுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அதை தொடர்ந்து ஆலயம் அருகே பிரத்யேகமாக யாகசாலை அமைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என தொடர்ந்து மூன்று கால யாக வேள்விகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அஷ்டபந்தன கும்பாபிஷே விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புரிந்த தீர்த்தத்திற்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா காட்டிய பிறகு, மேளதாளங்கள் முழங்க ஆலய யாகசாலையில் இருந்து புறப்பட்ட தீர்த்த கலசங்கள் கோபுரம் கலசத்திற்கு கொண்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கோபுர கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனிதத் திட்டத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ காரிய காளியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பண சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஸ்ரீ காரிய காளியம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மகா தீபாராதனை கட்டப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் அணைப்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.