Sabarimala Spot Booking: சபரிமலையில் இப்படி வந்தால் கூட்ட நெரிசலின்றி ஐயப்பனை தரிசிக்கலாம்
Sabarimala Ayyappa Temple: நவம்பர் 15 முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை பதினொரு லட்சத்து ஐம்பத்தோராயிரத்திற்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இந்தக் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம். மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் சபரிமலையில் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
பொதுவாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பம்பை வழிப்பாதை மற்றும் பெருவழிப் பாதையை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். இந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்கான விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்கியுள்ள நிலையில் , சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய நாளுக்கு நாள் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் கூட்ட நெரிசலை தவிர்க்க மாவட்ட காவல்துறை நிர்வாகத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
அதாவது ஐயப்ப தரிசனத்துக்காக பக்தர்கள், வரிசையில் முன்பதிவு செய்பவர்கள் அந்தந்த நாளில் உள்ள அட்டவணையை பின்பற்றினால், தேவையற்ற போக்குவரத்தை தவிர்த்து, சிரமமின்றி சுமூக தரிசனம் செய்யலாம் என மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். சபரிமாலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்வது கட்டாயம். ஸ்பாட் புக்கிங் 10,000 ஆக இருந்தபோதிலும், சில நாட்களில் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள்.
தற்போதைய மெய்நிகர் வரிசை முன்பதிவு வரம்பு 70,000 பேர் வராததால், ஸ்பாட் புக்கிங் வரம்பை தாண்டி வரும் பக்தர்கள் தற்போது தடையின்றி தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மதியம் 1 மணி வரை 36,828 பேர் பார்வையிட்டனர், அவர்களில் 7546 பேர் முன்பதிவு செய்த நாள் ஸ்லாட்டின் நேரத்திற்கு முன் அல்லது பின் வந்துள்ளனர்.
நவம்பர் 15 முதல் நேற்று மதியம் 1 மணி வரை பதினொரு லட்சத்து ஐம்பத்தோராயிரத்திற்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். 15 ஆம் தேதி முதல் இப்போது வரை, முன்பதிவு செய்யப்பட்ட நாள் ஸ்லாட்டின் நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ 230,000 க்கும் அதிகமானோர் வந்துள்ளனர். ஸ்லாட்டின் நேரத்தைப் பின்பற்றாமல் தரிசனத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை இது குறிக்கிறது. இது மொத்த எண்ணிக்கையை பாதிக்கிறது.
பக்தர்களின் இத்தகைய வருகையால் தேவையற்ற கூட்டமும் ஏற்படுகிறது. எனவே, பக்தர்கள் உரிய நேரத்தில் தரிசனத்திற்கு வந்தால், ஐயப்பனை தரிசனம் செய்வது சிரமமின்றி, சுமூகமாக நடக்கும் என, மாவட்ட காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ளவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்றலாம் என்றும், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் முன்பதிவு செய்யும் அட்டவணையை ஓரளவுக்கு பின்பற்றலாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.