கரூரில் வராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் உழவர் சந்தை வராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
கரூர் உழவர் சந்தை பிரம்ம தீர்த்த சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி , பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராகி அம்மனுக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு ,நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் பழைய ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா.
கரூர் நகரப் பகுதியான பழைய ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேக யாகசாலை அமைத்து காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி, என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது. யாகசாலை யாக வேள்வி கலசத்திற்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார். மேள தாளங்கள் முழங்க நான்கு கால யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை வான வேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் எடுத்துச் சென்றார்.
கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயர், கணபதி, பாலமுருகன், ஐயப்பன், கருப்பண சுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனிதத் தீர்த்தத்தால் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் பழைய ரயில்வே ஸ்டேஷன் காலையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷே விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.