Vaikuntha Ekadashi: வைகுண்ட ஏகாதசி திருவிழா.. ஸ்ரீரங்கத்துக்கு போகும் ரயில்கள் விவரம்!
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் 19ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்லும் வகையில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா
ஆன்மிக மாதமான மார்கழி மாதம் மிகப்பெரிய வகையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படும். 2025ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். இதனை முன்னிட்டு திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இப்படியான நிலையில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் 19ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ராப்பத்து உற்சவம், பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்த விழாவானது 2026 ஜனவரி 9ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைகிறது.
ரயில்கள் நின்று செல்ல உத்தரவு
இதனிடையே சொர்க்கவாசல் திறப்பன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு வசதிகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் சில ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
Ahead of Vaikunta Ekadashi At Srirangam.
— Thiruchchirappalli Villupuram Chordline Rail Users (@TPJCLDemands) December 23, 2025
✓ 12633/34 Chennai Egmore Kanniyakumari Superfast
✓ 16101/02 Chennai Egmore Kollam Express
✓ 12693/94 Chennai Egmore Thoothukudi Pearl City Superfast
✓ 12637/38 Pandiyan Superfast will stop at Srirangam.
Additionally, the 16868/67… pic.twitter.com/EopZZq9oQi
அதன்படி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் 12633 என்ற எண் கொண்ட சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரும் டிசம்பர் 29,30, 31 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு இரவு 9.50 மணிக்கு வந்து 9.52க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் 12634 ரயிலானது டிசம்பர் 28,29,30 ஆகிய 3 நாட்கள் மட்டும் நள்ளிரவு 12.53 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் முத்து நகர் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் சென்னையில் இருந்தும், மதுரை மற்றும் தூத்துக்குடியில் இருந்து செல்லும்போது டிசம்பர் 28 முதல் 30ம் தேதி வரை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்துக்கு பிற பகுதிகளில் இருந்து ரயில்கள் இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





















