மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
இந்துக்கள் , கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் இணைந்து கட்டிய பள்ளிவாசல் - தமிழகத்தில் மத நல்லிணக்க கிராமம்
பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 2000 க்கு மேற்பட்டவர்களுக்கு கந்தரி என்னும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜமாத்தார்கள் அருகிலேயே ஐய்யப்ப பக்தருடன் பள்ளிவாசலில் உணவு அருந்தினர் .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பனங்குடி கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் , இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக சாதி , மத வேறுபாடுகளை கடந்து சுதந்திரத்திற்கு பிறகும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இந்து , இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் கோயில்கள் அருகருகே அமைந்துள்ளது.
இந்த ஊரில் உள்ள பள்ளிவாசல் 200 ஆண்டுகள் பழையானது என்று கூறப்படுகிறது. தற்போது அந்த பள்ளிவாசல் சிதலமடைந்ததால் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் புதிதாக பள்ளிவாசல் கட்ட கடந்த வருடம் பணியை தொடங்கினர்.புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் தலைவர் தலைமையில் கிராமத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து பெருவாரியாக உள்ள இந்துமக்கள் ,கிறிஸ்துவ மக்கள் பங்களுப்புடன் இணைந்து ரூபாய் 70 லட்சம் செலவில் பிரமாண்டமான புதிய முகைதீன் ஆண்ட்வர் ஜும்மா பள்ளிவாசல் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழாவான நேற்று கிராம மக்கள் நாட்டார் தலைமையில் இந்து கோயிலில் வழிபாடு செய்து ஊர்வலமாக சீர்வரிசை தட்டுடன் மதநல்லினக்கம் போற்றும் பள்ளிவாசல் திறப்பில் கிராம மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் கிராம திருவிழா போல் பள்ளிவாசல் திறப்பு விழா கலந்து கொண்டனர். தமிழர்களின் மத ஒற்றுமைக்கு போற்றுபவர்கள் என்று கூறும் வகையில் எடுத்து காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 2000 க்கு மேற்பட்டவர்களுக்கு கந்தரி என்னும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜமாத்தார்கள் அருகிலேயே ஐய்யப்ப பக்தருடன் பள்ளிவாசலில் உணவு அருந்தினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DRUNK AND DRIVE: வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: மதுரையில் புதிய வகை ப்ரீத் அனலைசர் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion