மேலும் அறிய

Sabarimalai: சபரிமலை நடைதிறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி.. ஏப்ரல் 15-ஆம் தேதி விஷு கனி தரிசனம்..

சித்திரை மாதம் விஷு பண்டிக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சித்திரை மாதம் விஷு பண்டிக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள். அதன்படி சித்திரை மாதம் விஷு பண்டிகைக்காக நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து தீபாராதணை காட்டப்பட்டு, 18 ஆம் படிக்கு  கீழ் இருக்கும் கற்பூர ஆழியில் ஜோதி ஏற்றப்பட்டது. இன்று காலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மேலும் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுகிறார்கள். சித்திரை மாதம் பிறக்க இருப்பதால் 9 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. இந்த தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும், ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக  இன்று முதல் சிறப்பு பேருந்து வசதியையும் கேரள  போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சித்திரை விஷு பண்டிகைக்காக கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விஷு விழாவுக்காக இன்று முதல் 19-ஆம் தேதி வரை சபரிமலையில் நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 15-ஆம் தேதி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு, அன்று அதிகாலை 4 மணி முதல் சபரிமலை ஐயப்பன் காய்கனி அலங்காரத்தில் காட்சியளிக்க இருக்கிறார். ஏப்ரல் 15ஆம் தேதி விஷு கனி தரிசனம் நடைபெறுகிறது. விஷு பண்டிகை என்பது மலையாள வருட பிறப்பாகும். 

வரிசை எண்

பூஜைபிரசாதம்

விலை பட்டியல்

1

நெய்அபிஷேகம்: 1 தேங்காய்

ரூ. 10

2

அஷ்டாபிஷேகம்

ரூ. 6,000

3

கணபதி ஹோமம்

ரூ. 375

4

உஷ பூஜை

ரூ. 1,500

5

நித்ய பூஜை

ரூ. 4,000

6

பகவதி சேவை

ரூ. 2,500

7

களபாபிஷேகம்

ரூ. 38,400

8

படி பூஜை

ரூ. 1,37,900

9

துலாபாரம்

ரூ. 625

10

புஷ்பாபிஷேகம்

ரூ. 12,500

11

அப்பம் (1 பாக்கெட்)

ரூ. 45

12

அரவணை (1 டின்)

ரூ. 100

13

விபூதி பிரசாதம்

ரூ. 30

14

வெள்ளை நைவேத்தியம்

ரூ. 25

15

சர்க்கரை பாயசம்

ரூ. 25

16

பஞ்சாமிர்தம்

ரூ. 125

17

அபிஷேக நெய் (100 மிலி)

ரூ. 100

18

நவக்கிரக பூஜை

ரூ. 450

19

ஒற்றைகிரக பூஜை

ரூ. 100

20

மாலை/வடி பூஜை

ரூ. 25

21

நெல்பறை

ரூ. 200

22

மஞ்சள் பறை

ரூ. 400

23

தங்க அங்கி சார்த்தி பூஜை

ரூ. 15,000

24

நீராஞ்சனம்

ரூ. 125

25

இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை)

ரூ. 300

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget