மேலும் அறிய

கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

கடந்த மாதம் 21-ம் தேதி கர்நாடகா மாநிலம் தலைக்காவிரியில் துலா தீர்த்த காவிரி அம்மன் ரத யாத்திரை அங்கிருந்து துவங்கியது.

கரூர் அருகே காவிரி ஆற்றுக்கு மஹாதீபாரதனை காண்பித்து வழிபட்ட சாதுக்கள், சந்நியாசிகள்.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து 12ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரையை காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 21-ம் தேதி கர்நாடகா மாநிலம் தலைக்காவிரியில் துலா தீர்த்த காவிரி அம்மன் ரத யாத்திரை அங்கிருந்து துவங்கியது.

கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்ற இந்த யாத்திரை கரூர் மாவட்டம் வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று இரவு கரூரை அடுத்த நெரூரில் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அம்மனுக்கு லோப முத்ரா யாகம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆற்றங்கரையில் 7 சாதுக்கள் ஏறி காவிரி மஹா ஆராத்தி காண்பிக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

நெரூரில் காவிரி தாய்க்கு மஹா ஆராத்தி

கரூர் அருகே நெரூரில் காவிரி ரத யாத்திரை குழுவினர் சார்பில், காவிரி தாய்க்கு மகா ஆராத்தி விழா நடந்தது. அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் கரூர் குடும்பம் சார்பில் 12 ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு, துலா தீர்த்த ரத யாத்திரை கடந்த மாதம் 21 இல் கர்நாடக மாநிலம் குடகுமலையிலிருந்து  தொடங்கியது. இந்த யாத்திரை வரும் 13 இல் நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் நிறைவு பெறுகிறது. காவிரி ஆற்றின் கறைகளை பலப்படுத்தி தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரி ஆற்றிற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துலா தீர்த்த ரத யாத்திரை தொடங்கியது.

கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

இக்குழுவினர் நேற்று முன்தினம் கரூர் வந்தனர். தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று மாலை 5.30 மணிக்கு, நெரூர் படித்துறையில், காவிரி ஆற்றுக்கு லோபா முத்ரா ஹோமம், ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்தினரின் 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து காவிரி தாய்க்கு மகா ஆராத்தி விழா சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரித்தாயை வணங்கினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுவாமி ராமானந்தா, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், வித்யா சங்கர் சரஸ்வதி சுவாமிகள், சுவாமி சந்திரசேகரானந்த  மகாராஜ், அமர்நாத் சுவாமிகள், சுவாமி ஆத்மனந்தா சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget