ஸ்ரீ ராமநவமி: கரூர் கோதண்டராமன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் - பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் கேவிபி நகர் கோதண்டராமன் ஆலயத்தில் ராமநவமி சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
இன்று ராமநவமியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. கரூர் கேவிபி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமன் ஆயத்தில் வீற்றிருக்கும் ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு இன்று ராமநமவியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ராமன், லட்சுமணன், சீதை, அனுமார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .
அதை தொடர்ந்து மூலவர் ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு துளசியால் ஆலயத்தின் பட்டாச்சாரியார் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கேவிபி நகர் ஸ்ரீகோதண்டராமன் ஆலயத்தில் நடைபெற்ற ராமநவமி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ராமர் ஆலயங்களிலும் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி தருகின்றனர். இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மாவட்ட முழுவதும் ஆங்காங்கே உள்ள ராமர், அனுமார் உள்ளிட்ட ஆலயங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பசுபதீஸ்வரர் நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா காட்சி.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆலய கொடி படத்தில் கொடி ஏற்ற நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இந்நிலையில் இன்று இரவு ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க கல்யாண பசுபதீஸ்வரர் நந்தி வாகனத்திலும், அலங்காரவல்லி அம்பிகை அன்ன வாகனத்திலும் திருவீதி விழா காட்சியளித்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தனர்.
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திருவிழாவில் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் உற்சவர் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமி திருவீதி உலா வருகை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து தேங்காய்,பாலம் பிரசாதம் வைத்து வழிபட்டு தங்களது நேர்த்திக் கடனை செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.