புதுச்சேரி 121வது ஆண்டு மாசி மக பெருவிழா - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
புதுச்சேரி: 121வது ஆண்டு மாசி மக பெருவிழா....பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்...
புதுச்சேரி: 121வது ஆண்டு மாசி மக பெருவிழாவில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட உற்சவர்கள் ஒன்று கூடினர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் ஆண்டு தோறும் மாசிமகம் பெருவிழா வெக விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசிமகம் திருவிழா நடைபெறும் போது வைத்துக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் கடற்கரையில் குவிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவார்கள். ஒரே இடத்தில் அனைத்து சாமிகளும் அருள் பாலிப்பதால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாசி மகத்திற்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் 121-ஆம் ஆண்டு மாசி மக பெருவிழா இன்று வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெறுகிறது.
மாசிமகம் தீர்த்தவாரியையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் மைலம் முருகன், தீவனூர் விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, அதேபோல் புதுச்சேரி பகுதியில் இருந்து மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர், உட்பட புதுச்சேரி பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இதனையொட்டி மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்காக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கோவில் சுவாமிகள் நிற்கும் இடத்திற்கு பந்தல் அமைப்பதும், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் கடற்கரையில் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவி சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போலீஸ் தரப்பில் கண்காணிப்பு தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டுள்ளது. மாசிமகத்தை யொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்