கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா - பக்தர்கள் நேர்த்திக் கடன்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கடந்த 2-ம் தேதி மாரியம்மன் கம்பம் போடும் நிகழ்வு நடைபெற்றது.வாகனத்தின் திருவீதி உலா காட்சி
தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அமராவதி ஆற்றில் இருந்து அக்னி சட்டி, பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கடந்த 2-ம் தேதி மாரியம்மன் கம்பம் போடும் நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி பகவதி அம்மன் கரகம் ஆலயம் வந்தடைந்தது. இந்நிலையில் நாள்தோறும் முத்து மாரியம்மன் பல்வேறு வாகனத்தின் திருவீதி உலா காட்சி தருகிறார்.
இந்நிலையில் இன்று அமராவதி ஆற்றில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் முத்து மாரியம்மனுக்காக பால்குடம், அக்னி சட்டி, அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடனை செய்தனர். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அமராவதி ஆற்றில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதியில் வழியாக ஆலயம் வந்தடைந்தது. ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தீமிதி திருவிழாவை சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நீர்மோர், கம்மங்கூழ், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி, பால்குடம், அலகு குத்துதல், தீமிதி திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடுகளை ஆலய கொத்துக்காரர் உள்ளிட்டு பல்வேறு நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தாந்தோன்றி மலை போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் நெய்தலூர் தெற்கு கிராமம் சின்னப்பனையூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளதை கோவிலில் விநாயகர் கருப்பசாமி ஆகிய பரிவிவார தெய்வங்கள் உள்ளன. இந்த தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி புதிதாக கோவில் கட்டப்பட்ட திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதை அடுத்து ஊர் பொதுமக்கள் பெருக மணிக்கு சென்று காவிரி ஆற்றில் இருந்து புனித நீராடி தீத்த குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு சேவை புறப்பாடு நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூஜிக்கப்பட்ட புனித நீரை உருவாக்கியவர்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வந்து சின்னக்காலை சிவாச்சாரியார் வெங்கடேஷ் தலைமையில் மாரியம்மன் கோவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டு சுற்றியது இதை பார்த்த பக்தர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்ன சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சின்னப்பானை ஊர், களத்துப்பட்டி, இராச்சிப்பட்டி, இராமாயி பணியூர், பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.