Sabarimala Temple : ஓணம் பண்டிகை; சபரிமலை கோயிலில் நடை திறப்பு எப்போது? - பக்தர்களுக்கான முழு விவரம் இதோ
வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயிலில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி 861 தொழில்நுட்ப பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
அப்படி தரிசனம் செய்வதற்காக நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 13-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது தவிர ஒவ்வொரு தமிழ் மாத (மலையாள மாதத்தின்) பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜை நடைபெறும். மேலும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி திருவிழாவையொட்டியும் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 15-ந் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓண விருந்து (சத்யா) வழங்கப்படும்.
தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.