கரூர் ஸ்ரீ அபயபிரதான ரங்கநாதர் ஆலய நவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
கரூர் மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாளை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம்.
அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாளை முன்னிட்டு சரஸ்வதி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் நிலையில் கரூர் மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாளை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அணிவித்து அதன் தொடர்ச்சியாக சரஸ்வதி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி ஒன்பதாம் நாள் சிறப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் வீதி விஸ்வகர்மா சக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாளை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்.
நவராத்திரி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அது தொடர்ச்சியாக பல்வேறு அலங்காரத்தில் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் , தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி ஆராதனை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் துர்க்கை அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம் செய்து அதை தொடர்ந்து குங்குமத்தால் 1008 அர்ச்சனைகள் நடைபெற்றது.
சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி ஒன்பதாம் நாள் சிறப்பு அலங்காரத்திற்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலயத்தில் சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.