Navratri 2023 Fasting: நவராத்திரி விரதம் இருக்கப்போறீங்களா? அப்போ இதையெல்லாம் தவிர்த்திடுங்க!
Navratri 2023 Fasting Procedure: நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15ம் தேதி தொடங்கி, அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைகிறது.
நவராத்திரி 2023:
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி(Navratri) பண்டிகையும் ஒன்றாகும். நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நவம் என்பதற்கு ஒன்பது என்று பொருள் ஆகும். துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளும் சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும். 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை மூன்று, மூன்று நாட்களாக பிரித்து 3 தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.
அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. செல்வத்தை தரும் லட்சுமி தேவியின் ஆட்சிக்காலம் இதுவாகும். கடைசி 3 நாட்கள் கல்விச்செல்வத்தின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கான வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைகிறது.
விரதம் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்:
இந்த ஒன்பது நாட்களும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்வது வழக்கம் தான். கொலு வைத்தவர்கள், கொலு வைக்காதவர்கள் என்று வெவ்வேறு வகையில் நவராத்திரியை கொண்டாடினாலும் பல பெண்கள் நவராத்திரிக்கு விரதம் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் 9 நாட்களும் விரதம் இருந்து பூஜை செய்து, அம்பாளை வழிபடுவார்கள். இந்நிலையில், விரதம் கடைபிடிக்கும்போது எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் மற்றும் எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
விரதம் இருக்கும்போது, பழங்கள், பால், மோர், பழச்சாறு ஆகியவை சாப்பிடலாம். ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிடுபவர்கள், பால் அல்லது மோர் அருந்தலாம். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். மேலும், திட உணவாக சாப்பிடாமல், கஞ்சி அருந்தலாம். மேலும், வேக வைத்த சுண்டல், பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம்.
விரதம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பொதுவாக விரதம் இருக்கையில், அதிக மசாலா, பூண்டு, வெங்காயம், முருங்கை உள்ளிட்ட பல உணவுகள் தவிர்க்க வேண்டும். நவராத்திரி பூஜை செய்பவர்கள் முழுதாக இருக்கும்போது, அரிசி, கோதுமை ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். மேலும், விரதம் இருப்பவர்கள், வீட்டில் சமைத்த உணவுகள், பழங்களை தவிர்த்து, ரெடிமேடாக பாக்கெட்டில் கிடைக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், எண்ணெயில் பொறித்த உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, இவ்வகை உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படும்.
மேலும் படிக்க
புரட்டாசி 2வது சனிக்கிழமை: கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்