வைத்தீஸ்வரன் கோயிலில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் தரிசனம்
சீர்காழி அடுத்த புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
சீர்காழி அடுத்த புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா... 700 நாட்டியக்கலைஞர்கள்... களைகட்டிய பெரிய கோயில்
4448 நோய் தீர்க்கும் ஸ்தலம்
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
'இந்த இடத்தில்தான் சமத்துவமும், சகோதரத்துவமும் உருவாகும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன ?
கந்தசஷ்டி விழா
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த இரண்டாம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நடந்து முடிந்த நிலையில், நேற்று தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஸ்ரீ வள்ளி திருகல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக சண்முகநாதர் சன்னதி முன்பு அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ஸ்ரீ வள்ளி உடனாகிய முருகப்பெருமான் எழுந்துருளினார். தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெற்றது.
திருமண சடங்குகள் செய்து வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மங்கள நாணை அணிவித்து ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.