![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BiggBoss Tamil: "தமிழ் படிக்கல.. உங்களுக்கு இந்தி தெரியுமா?" பிக்பாஸ் வீட்டில் சவுண்டு விட்ட செளந்தர்யா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில், சக போட்டியாளர் ரியானிடம் உங்களுக்கு இந்தி தெரியுமா? என்று சௌந்தர்யா கேட்டார்.
![BiggBoss Tamil: BiggBoss Tamil season 8 actress soundarya ask ryan dont know hindi BiggBoss Tamil:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/11/a246a9feb0bb2fc1f8c23d9f043a19fc1731305146545102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் வெற்றிகரமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தி தெரியுமா?
இந்த பிக்பாஸ் சீசனை கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியது முதலே தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனின் சௌந்தர்யா, முத்துக்குமரன், விஜே விஷால், ரஞ்சித் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக முத்துக்குமரனும், சௌந்தர்யாவும் உருவெடுத்துள்ளனர். சௌந்தர்யாவும், வர்ஷினியும் அமர்ந்திருந்தனர். இவர்களில் வர்ஷினி முக நட்பது திருக்குறளை கூறினார். அப்போது அவரது அருகில் இருந்த சௌந்தர்யா "சாரி.. நான் தமிழ் படிக்கல.. இந்தியில் சொல்லட்டுமா" என்று கேட்பார். பின்னர், சௌந்தர்யா ஆண்கள் அணியில் உள்ள சக போட்டியாளர் ரியானிடம் எக்ஸ்க்யூஸ் மீ.. உங்களுக்கு இந்தி தெரியுமா? என்று கேட்டார்.
ரியானிடம் வாக்குவாதம்:
பின்னர் இருவரும் இந்தியிலே பேசிக் கொண்டனர். அதற்கு அவர் எனக்கு இந்தி தெரியும் என்கிறார். பின்னர், அவர் இந்தியில் தப்பா பேசியதை கேலி செய்யும் சௌந்தர்யா அவரிடம், “ இந்த வீட்டில் நீங்க என்ன பண்றீங்க? ஒரு வேலையும் பண்ணல?” என்கிறார். இவர்கள் இருவரும் இந்தியில் வாக்குவாதம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது அவர் மிகவும் அமைதியாக இருந்தார். நடனம் மட்டும் ஆடிக் கொண்டிருந்த அவர் கடந்த சில நாட்களாகவே எக்ஸ் தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறார்.
வாரந்தோறும் தன்னை ரசிகர்கள் பேசும் அளவிற்கும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் வகையிலும் பல கன்டென்களை அள்ளி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)