'இந்த இடத்தில்தான் சமத்துவமும், சகோதரத்துவமும் உருவாகும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன ?
மற்ற மாநிலங்களிலும் தமிழகம் பாராட்டபடுவதற்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சர் தான் காரணம், அடுத்த முறையும் திமுக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
விழுப்புரம்: விளையாட்டிற்கு அதிகப்படியான முக்கியத்துவம் தந்து துணை முதலமைச்சர் உதயநிதி செயல்படுவதாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் உருவாகும் இடம் விளையாட்டில் எனவும் மற்ற மாநிலங்களிலும் தமிழகம் பாராட்டபடுவதற்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சர் தான் காரணம் என்றும் அடுத்த முறையும் திமுக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி திட்டம் துவக்க விழா விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் தொடங்கி நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓடி விளையாடு துவக்க விழாவில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மல்லர் கம்ப வீரர்கள் கலந்து கொண்டு சிலம்பம், மல்லர் கம்பத்தில் ஒரே நேரத்தில் நூறூக்கும் மேற்பட்டோர் மல்பர் கம்ப விளையாட்டில் அசத்தினர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தினை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச்சென்று வருகிறார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாடிய பொழுது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், வனத்துறை அமைச்சர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களை கேட்டறிந்து செயல்படுத்தி வருவதால்தான் விழுப்புரம் மாவட்டம் அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்று வருவதோடு, மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 12,525 ஊராட்சிகளிலும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை கொண்டாடும் வகையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விளையாட்டிற்கு பணம் ஒரு பொருளாதார தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையினை உருவாக்கி விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையினை வழங்கும் பணிகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த காலங்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்பதே நாம், அறிந்திடமால் இருந்து வந்தோம், தற்பொழுது உலகமே பாராட்டும் வகையில் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் செயல்பாடுகள் விளiயாட்டுத்துறையில் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சமயத்திலேயே ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியினை சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் நடத்திக்காட்டியுள்ளார்கள்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், பார்முலா கார் பந்தயம், ஏசியா ஹாக்கி போட்டி, கேலோ விளையாட்டுப்போட்டிகள், அலை சறுக்கு போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளின் பங்கு சிறப்பாக அமைவதற்கு வழிவகை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.
விளையாட்டு போட்டி என்பது ஒரு வகுப்பறை போன்றே, ஏனென்றால் விளையாட்டின் மூலம், சுயஒழுக்கத்தினை கற்றுக்கொள்ள முடியும். விளையாட்டின் மூலமே, சமத்துவம் மற்றும் சகோரத்துவத்தினை உருவாக்க முடியும். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 60 க்கும் மேற்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மற்றமாநிலங்களிலும் தமிழகம் பாராட்டபடுவதற்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சர் தான் காரணம் என்றும் அடுத்த முறையும் திமுக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
விழுப்புரம் மாவட்டம்தான் அதிகப்படியான மல்லர் கம்ப வீரர்களை உருவாக்கி வருகிறது. மல்லர்கம்பம் விளையாட்டிற்கு விழுப்புரம் மாவட்டமானது தாயாக விளங்கி வருகிறது. மல்லர் என்றால் வீரர் என்று பொருள் சொல்வார்கள். அந்த வகையில் மல்லர் கம்பம் என்று குறிப்பிடாமல் இதனை வீரர் கம்பம் என்றே நாம் சொல்ல வேண்டும். எனவே, விளையாட்டுத்துறையில் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக்கொண்டு பயனடைய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்