மயிலாடுதுறை மந்தகருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்த பெண்கள்.. காளியம்மன் கோயிலிலும் வழிபாடு!
சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து திருமுல்லைவாசல் கிராமத்தில் பழமையான ஸ்ரீ மந்தக்கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆண்டுத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டுஇந்த கோயிலின் திருவிழா கடந்த ஜுலை 16 -ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி திருவிழா கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமை நடைபெற்றது, அதற்காக முளைப்பாரிகளுக்கு தேவையான நவதானியங்கள் கடந்த ஜூலை 18 -ம் தேதி கோயில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை பக்தியுடன் பெற்று கொண்ட பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று ஒரு வார காலம் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தார். தொடர்ந்து கடந்த செவ்வாய் இரவு திருமுல்லைவாசல் கடற்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது.
அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிக்கு சிறப்பு படையலிட்டு பக்தர்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டத்துடன், சக்தி முன் செல்ல தலையில் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து பெண்கள் ஆண் என கும்மியடித்து குலவை இட்டு வழிபாடு செய்தனர். பின்னர் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை கோயிலில் இருந்து பெரிய கரகத்தைஎடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500 -க்கும் மேற்பட்ட ஆண், பெண் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு திருமுல்லைவாசல் கடற்கரைக்கு முளைப்பாரியை தலையில் சுமந்து சென்று, அங்கு பெண்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்நிலையில் விழாவில் நிறைவு விழாவாக விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களுடன் உலக நன்மை வேண்டியும், காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிப்பட்டனர். கோயில் எதிரில் வரிசையாக பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வர பெண் பக்தர்கள் குலவையிட்டு வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.