சீர்காழி சட்டைநாதர் கோயிலில் நடைபெற்றசங்காபிஷேகம்; பரவசம் அடைந்த பக்தர்கள்
சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சங்காபிஷேக வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற சங்காபிஷேக வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
சீர்காழி சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான பெரிய கோயில் என அழைக்கப்படும் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
திருஞானசம்பந்தர் வரலாறு
சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது.
1008 சங்காபிஷேகம்
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புனித நீர் நிரப்பப்பட்ட சங்குகள் நெற்பரப்பின் மீது வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடைபெற்று, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம்
அதனை தொடர்ந்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சங்காபிஷேக பூஜைகளை சிவாச்சாரியார்கள் சுரேஷ், கைலாஷ் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!