ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
ஆச்சாள்புரத்தில் கோலாகலமாக நடந்த சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோலாகலமாக நடைபெற்ற ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிவலோக தியாகராஜ சுவாமி கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருவென்னீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சமயக்குறவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்த ஸ்தலமாகவும், துணைவியாருடன் சிவசோதியில் கலந்து அருளிய சிறப்புமிக்க கோயிலாக திகழ்கிறது.
14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 20-ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. இன்று 6-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
வகையில் பழனியில் நடைபெற உள்ள முத்தமிழ் முருகன் மாநாடு! ஏற்பாடுகள் என்ன?
கடங்கள் புறப்பாடு
தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, சிவ வாத்தியங்கள் மற்றும் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. அதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்க ஆதீனங்கள்
கும்பாபிஷேகத்தில் செங்கோல் ஆதீனம் 103 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28 வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது மடாதிபதி நாகராஜ் சுவாமிகள், நாச்சியார் கோயில் ஆதீனம் குருமகா சந்நிதானம் சிவசுப்பிரமணிய தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொண்ட பக்தர்கள் ஆபத்தை உணராமல் சாரத்தின் வழியாக கோபுரத்தின் மீது ஏறி தரிசனம் செய்தது காண்போரை பதை பதைக்க வைத்தது.
Mobile Phones: பட்ஜெட் விலையில் ரூ.15,000க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்கள் லிஸ்ட் இதோ!