மேலும் அறிய
Advertisement
Madurai: டெல்லி எய்ம்ஸ் போல, தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் அமைய பிரதமர் விரும்புகிறார் - அண்ணாமலை !
மதுரை மேயர் செயல்பாடு வடிவேலு காமெடி போல தென்னமரம் சின்னத்துல ஒரு குத்து, பனை மரச்சின்னதுல ஒரு குத்து போல மூர்த்தி, PTR ரிடம் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என மேயர் செயல்பாடு உள்ளது. - அண்ணாமலை
"2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்" - அண்ணாமலை நம்பிக்கை.
பிள்ளையார் சுழி
மதுரை மாநகர் பாஜக சார்பில், மத்திய அரசின் பஜ்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் மதுரை தினமணி டாக்கீஸ் அருகே உள்ள சாலையில் நடைபெற்றது. அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது...," திராவிட கட்சிகளை அகற்ற பிள்ளையார் சுழியை போட வேண்டும். தமிழகம் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து வெளி வந்துள்ளது, என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இங்குள்ள நிர்வாகிகளுக்கு தமிழக மக்கள் தோளை தட்டிக்கொடுத்து நீங்கள் செல்லும் பாதையில் தொடர்ந்து செல்லுங்கள் 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் வாயிலாக 37 % இருக்கும் வாக்கு எண்ணிக்கை 2026-ல் 100% மாக இருக்கும் அதற்கு தமிழக மக்கள் நம்பக்கம் இருக்கிறார்கள்.
கூட்டணிக்காக அல்ல
மதுரையில் இரண்டு தாதா உள்ளார்கள் ஒருவர் மூர்த்தி மற்றொருவர் PTR பழனிவேல் தியாகராஜன். மதுரை மேயர் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால். வடிவேலு காமெடி போல தென்னமரம் சின்னத்துல ஒரு குத்து, பனை மரச்சின்னதுல ஒரு குத்து போல மேயர் செயல்பாடு உள்ளது. மதுரையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. வரிகட்டியும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர். 1200 ஆண்டுகளுக்கு பிறகு சௌராஷ்டிர மக்களுக்காக சௌராஷ்ட்ரா தமிழ் சங்கத்தை நடத்தி மோடி அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளார். 2017- MGR க்கும், 2024 - கலைஞருக்கும் 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அது கூட்டணிக்காக இல்லை., இங்கு உள்ள கிணற்று தவணைகளுக்கு புரிந்து கொள்வதற்கு சற்று நேரமாகும்.
ஜாக்கிரதையாக உழைக்க வேண்டும்
மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்பது பிரதமர் மோடி விரும்பி எடுத்த முடிவு. அப்போதைய தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் வேறு இடத்திற்கு எய்ம்ஸ் கேட்டு கோப்பு அனுப்பினார்கள். ஆனால் பிரதமர் மோடி தான் மதுரைக்கு முக்கியத்துவம் அளித்து எய்ம்ஸ் அமைய வாய்ப்பளித்தார். மதுரை எய்ம்ஸ் என்பது 250 கோடி - 300 கோடி என மற்ற மாநிலங்களில் அமைத்த எய்ம்ஸ் போன்றது அல்ல. ஜப்பான் நிதியுதவி உடன், 1800 கோடி மதிப்பீட்டில், டெல்லி எய்ம்ஸ் போன்று அமைய உள்ளது. வட இந்தியாவிற்கு டெல்லி எய்ம்ஸ் போல, தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் அமைய பிரதமர் விரும்புகிறார். அது வருகிற 2026 மேக்குள் தமிழகத்தில் அமையும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 12 சதவீத ஓட்டுகள் கொடுத்து மக்கள் நம்மை ஒரு அரசியல் கட்சி என அங்கீகரித்து, நமது செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை தமிழகத்தில் ஆளுகிற கட்சியாக கொண்டு வரலாமா.? என்று. மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஏன் மத்திய அரசின் திட்டங்கள் மெதுவாக செல்லவேண்டும்.? இதுவும் பொறுக்கி தனமான அரசியல். வருகிற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கு நாம் இன்னும், ஜாக்கிரதையாக, உத்வேகத்தோடு உழைக்க வேண்டும்” என பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion