மேலும் அறிய

புரட்டாசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் மாத புரட்டாசி பிறப்பை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

தமிழ் மாத புரட்டாசி பிறப்பை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பழமையான திருவெண்காடு வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் நடைபெற்ற சிறப்பு தீர்த்தவாரியில்  திரளான பக்தர்கள் வருகை தந்து தீர்த்த குளங்களில் நீராடி வழிபடு செய்தனர்.

பிரசித்தி பெற்ற சிவாலயம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

பிரசித்தி பெற்ற வானதிராஜபுரம் ஸ்ரீ புங்க மரத்தாள் ஆலய குடமுழுக்கு திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புரட்டாசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்!

மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும்  உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம்  அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.  

வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!

புரட்டாசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்!

தமிழ் மாத பிறப்பு சிறப்பு தீர்த்தவாரி

இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத  பிறப்பு அன்று தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று புரட்டாசி மாத பிறப்பை அடுத்து சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர்  மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும்  தீர்த்தவாரி  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியின் போது திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர்.

தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம்?- தமிழர்களுக்கு எதிரான விதிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

புரட்டாசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்!

திருப்பணி பணிகள் தொடக்கம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு செய்ய திருப்பணிகளை தொடங்கிட பாலா ஸ்தாபனம்  செய்யப்பட்டு, தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்திட அரசு அறிவிப்பு வெளியிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பணிகள் தொடங்கிட ஏதுவாக விமான பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக அனைத்து சுவாமி, அம்பாள், அகோர மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெற்றது.  முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு  திருப்பணிகளுக்கான  பாலாலயம் செய்ப்பட்டது.  சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கலசங்கள் புறப்பட்டு கோயில் உட்பிராகத்தை சுற்றி வந்து, 63 நாயன்மார்கள் மண்டபத்தில் விமான பாலாலயத்திற்கான அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. அதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
Watch Video: பாவம்! தாயைப் பிரிந்த தவிப்பு! வாகனங்களை வழிமறித்த குட்டியானை - பாருங்க
Watch Video: பாவம்! தாயைப் பிரிந்த தவிப்பு! வாகனங்களை வழிமறித்த குட்டியானை - பாருங்க
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
Watch Video: பாவம்! தாயைப் பிரிந்த தவிப்பு! வாகனங்களை வழிமறித்த குட்டியானை - பாருங்க
Watch Video: பாவம்! தாயைப் பிரிந்த தவிப்பு! வாகனங்களை வழிமறித்த குட்டியானை - பாருங்க
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
Sanju Samson: தென்னாப்ரிக்காவை பொளந்து கட்டி சஞ்சு சாம்சன் சதம் - ரோகித், சூர்யகுமார் சாதனைகள் முறியடிப்பு
Sanju Samson: தென்னாப்ரிக்காவை பொளந்து கட்டி சஞ்சு சாம்சன் சதம் - ரோகித், சூர்யகுமார் சாதனைகள் முறியடிப்பு
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Breaking News LIVE 9th Nov 2024: சென்னையில் காலையிலே வெளுத்து வாங்கும் மழை
Breaking News LIVE 9th Nov 2024: சென்னையில் காலையிலே வெளுத்து வாங்கும் மழை
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Embed widget