பிரசித்தி பெற்ற வானதிராஜபுரம் ஸ்ரீ புங்க மரத்தாள் ஆலய குடமுழுக்கு திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குத்தாலத்தை அடுத்த வானதிராஜபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புங்க மரத்தாள் காளியம்மன் கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்து வானதிராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ நர்த்தன விநாயகர், ஸ்ரீ புங்க மரத்தால், ஸ்ரீ காளியம்மன் ஆலய மற்றும் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் அப்பகுதி மக்களின் குல தெய்வமாகவும், பக்தர்களின் வேண்தலை நிறைவேற்றும் தெய்வங்களாக விளங்கி வருகிறது.
IND Vs BAN:"ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்"- தீவிர பயிற்சியில் ஹிட் மேன் ரோஹித் ஷர்மா! அச்சத்தில் வங்கதேசம்
திருப்பணி வேலைகள்
இந்த சூழலில் இக்கோயில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் விழா நடத்த அவ்வூர் மக்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளை தொடங்கி பொதுமக்கள் பங்கேற்புடன் கோயில் திருபணியை தொடங்கி, கட்டிடங்கள் புதுப்பித்தல், வண்ணம் தீட்டும், புதிய சிலைகள் அமைந்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
பூர்வாங்க பூஜைகள்
அதனைத் தொடர்ந்து திருப்பணி தொடர்பான அனைத்து பயணிகளும் நிறைவுற்று கோயில் குடமுழுக்குக்குகான நாள் குறிக்கப்பட்டு, அற்கான பூர்வாங்க பூஜைகளை தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வரன் பூஜையும், அதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூர்ண குதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
”துர்கை அம்மன் அருளை முழுமையாக பெற வேண்டுமா” அப்ப இத மட்டும் பண்ணுங்க போதும்..!
யாகசாலை பூஜை
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை யாகசாலையில் இருந்து தலையில் சுமந்து மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, கோயில் கோபுர கலசங்களை அடைந்தனர். தொடர்ந்து மல்லாரி இசை வாத்தியங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத புனிதநீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Clove Tea: கிராம்பு டீ.. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுமா?நிபுணர்கள் சொல்லும் பரிந்துரைகள்
அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள மூலவ தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
NEET Topper Suicide: நீட் தேர்வு டாப்பர் - இளநிலை மருத்துவர் திடீர் தற்கொலை - காரணம் என்ன?