![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று திரும்பிய நபரை வீல் சேரில் அழைத்து வந்த ஆட்சியரிடம் முறையிட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
![வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....! Mayiladuthurai news family appealed to the collector who brought person injured accident and returned collector office - TNN வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/0b98847a3a905006463db96a82fcadad1726549466649733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று திரும்பிய நபரை வீல் சேரில் அழைத்து வந்து விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.
லிப்ட் கேட்டு வந்தவர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குடி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் விவசாயக் கூலி வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 25 -ஆம் தேதி மயிலாடுதுறைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது குத்தாலம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் மோதிய டிப்பர் லாரி
அப்போது அசிக்காடு சாலை அருகே வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டுள்ளது, அப்போது சுந்தர்ராஜ் லிப்ட் கேட்டு சென்ற இருசக்கர வாகனத்தில் டிப்பர் லாரி உரசியது. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது. இதில் இருசக்கர ஒட்டி வந்த நபர் வயலில் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பின்னால் அமர்ந்திருந்த சுந்தர்ராஜ் கால் மற்றும் கைகளில் டிப்பர் லாரியில் பட்டு கடுமையாக எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்கை
இதனை அடுத்து உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேலும் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுந்தர்ராஜீ அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை நிறைவுற்று வீட்டிக்கு செல்லாத சுந்தர்ராஜ் நேரடியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
திகைத்து நின்ற ஆட்சியர்
தொடர்ந்து வீல் சேரில் குடும்பத்தினருடன் பரபரப்பாக வந்த சுந்தரராஜீ மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்குள் நுழைந்துள்ளார். இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் செய்வதறியாமல் உடனடியாக கீழே இறங்கி வந்து அவரின் குறைகளை கேட்டறிந்தார். குத்தாலம் காவல் நிலையத்தில் விபத்துக்கு காரணமான டிப்பர் லாரியின் உரிமையாளர் சேகர் மீது புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது மனைவி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
Samsung Protest : போராடும் சாம்சங் ஊழியர்கள்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.. தொடரும் பதற்றம்...
ஆட்சியரின் நடவடிக்கை
பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்த நிலையில், விபத்து குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் எழுந்து நடக்க முடியாத சூழலில் சுந்தர்ராஜ் இருப்பதால் சிறிய அளவிலான கடை வைத்து தொழில் செய்து அவரின் வாழ்வாதாரத்தை காக்க ஏற்பாடு செய்வதாக அவரிடம் ஆட்சியர் உறுதியளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)